5 ஆண்டுகளுக்குப் பின் அமைச்சரவையில் முஸ்லிம்கள் !

0
மகாராஷ்டிராவில் 5 ஆண்டு களுக்குப் பின்னர் அமைச்சரவை யில் முஸ்லிம்களு க்கு பிரதி நிதித்துவம் அளிக்கும் வகையில் 3 பேர் அமைச்சர் களாக்கப் பட்டுள்ளனர்.
5 ஆண்டுகளுக்குப் பின் அமைச்சரவையில் முஸ்லிம்கள்


மகாராஷ்டிரா வில் 1960-ம் ஆண்டு முதல் அமைச்சரவை களில் முஸ்லிம் களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வந்தது.

மாநில மக்கள் தொகையில் 11.5% முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இதனால் அவர்களு க்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு முதல் 2014 வரை 64 முஸ்லிம்கள் அமைச்சர்க ளாக இருந்துள்ளனர். 

இவர்களில் 31 பேர் கேபினட் அமைச்சர்கள்; 33 பேர் துணை அமைச்சர்கள். 1995-ல் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த போது கூட ஷபீர் ஷேக் என்கிற முஸ்லிம் அமைச்சராக்கப் பட்டார்.

ஆனால் 2014-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவை யில் முதல் முறையாக முஸ்லிம் களுக்கான அமைச்சரவை பிரதிநிதித்துவம் மறுக்கப் பட்டது. 

2014 சட்டசபை தேர்தலில் 9 முஸ்லிம்கள் எம்.எல்.ஏ -க்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தற்போதைய தேர்தலில் 10 முஸ்லிம்கள் எம்.எல்.ஏ -க்களாகி உள்ளனர்.


2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..!

இம்முறை 4 முஸ்லிம்கள் அமைச்சர் களாக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேபினட் அமைச்சர்கள்; ஒருவர் துணை அமைச்சர். 

இதே போல் பிற சிறுபான்மை மதத்தினரும் மகாராஷ்டிரா அமைச்சரவை யில் இடம் வேண்டும் என்கிற குரலை வெளிப்படுத்துகின்றனர்.

1995-ம் ஆண்டு முதல் பார்சி சமூகத்தினருக்கு அமைச்சரவை யில் இடம் தரப்பட வில்லை.

1978-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர் களுக்கு அமைச்சரவை யில் இடம் கொடுக்கப்பட வில்லை என்கிற குமுறலும் மகாராஷ்டிராவில் இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)