லீவு முடிந்து எப்போ பள்ளிகள் திறக்கப்படும் தெரியுமா? - தமிழக அரசு !

0
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் அரையாண்டு விடுமுறை நீடிக்கப் பட்டுள்ளது.
லீவு  முடிந்து எப்போ பள்ளிகள் திறக்கப்படும்


தமிழகத்தில் கிறிஸ்துமசுக்கு முன்பு, அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 23ம் தேதியில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. 

ஜனவரி 3ம் தேதி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இன்று மாலை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில், அரையாண்டு விடுமுறை முடிவடைந்து, ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த நிலையில், கூடுதலாக ஒரு நாள் லீவு நீட்டிக்கப் பட்டுள்ளது. 

அதாவது ஜனவரி 4ம் தேதி, சனிக்கிழமை தான், பள்ளிகள் திறக்கப்படும். இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும். ஒரு வேளை, கூடுதலாக ஒரு நாள் கூட வாக்கு எண்ணிக்கை தொடரும் வாய்ப்பு உள்ளது. 

வாக்கு எண்ணிக்கை பணியில் பள்ளி, ஆசிரியர்கள் கணிசமாக ஈடுபட்டிருப் பார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு, பள்ளிகள் ஜனவரி 4ம் தேதி திறக்கப்படும் என்று கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)