வீட்டில் கஞ்சா விற்பனை.. கணவன் மனைவி கைது !

0
வீடு வாடகைக்கு எடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர் களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த தம்பதியினர் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தம்பதி


மேலும் நாற்பதாயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கல் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி.

இவரது மனைவி சுமதி. இருவரும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் புதுச்சேரி முதலியார் பேட்டை சுந்தரராசு வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்துள்ளனர்.

இந்த வீட்டிற்கு தினமும் அதிக அளவில் இளைஞர் களும், குடிமகன் களும் வந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் முதலியார் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை யடுத்து முதலியார் பேட்டை போலீசார் அந்த வீட்டில் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் 6 பாக்கெட் கஞ்சா பதுக்கி வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இதனை யடுத்து கணவன் மனைவி இருவரும் கைது செய்யப் பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணா மலையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்தது.

அங்கு உமாமகேஷ் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 200 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உமாமகேஷ் கைது செய்யப் பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 40 ஆயிரம் ஆகும். புதுச்சேரியில் குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.
வீட்டில் கஞ்சா விற்பனை


இதனை காவல் துறையினர் கண்டு கொள்வதே இல்லை. இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளி யிட்டிருந்தார்.

அதில் குட்கா, கஞ்சா, சிகரெட் போன்ற வற்றை கடைகளில் விற்பனை செய்ய கூடாது என்றும்,

மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வரின் எச்சரிக்கையை யடுத்து புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி புதுச்சேரியில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட வற்றில் சோதனை நடத்தப் பட்டது. அதில் சிகரெட், குட்கா, விற்பனை செய்த19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதில் பல ஆயிரம் மதிப்பிலான சிகரெட் குட்கா போன்றவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings