என்கவுன்ட்டரின் பின்னால் ஒளிந்திருக்கும் பயங்கரம் !

0
நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்திய சம்பவம், கடந்த மாதம் 27ஆம் தேதி தெலங்கானா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் ஆகும்.
என்கவுன்ட்டருக்கு பின்னால் இருக்கும் பயங்கரம்


இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேர் முகமது அரீப், ஜே.நவீன், ஜே.ஷிவா, சே சென்ன கேஷவலு ஆகியோர் ஆவர். 

இவர்கள் விசாரணைக் காக கடந்த 6ஆம் தேதி சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அப்போது தப்பிக்க முயன்றதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பொது மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். அதே சமயம் சில எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து சைபராபாத் போலீஸ் தற்போது கர்நாடகாவில் முகாமிட்டுள்ளது. அங்கு தெலங்கானா - கர்நாடகா எல்லைப் பகுதியில் நடந்த குற்றங்கள் குறித்து விசாரித்து தகவல் களை சேகரித்து வருகின்றனர்.
குற்றப் பின்னணி


இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் அரீப், சென்ன கேஷவலு ஆகிய இருவரும் 

ஏற்கனவே 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட வழக்குகளை உறுதி படுத்தும் நடவடிக்கை யில் ஈடுபட் டுள்ளோம்.

இதற்காக போலீசார் குழுக்களாக பிரிந்து குற்றப் பின்னணி கொண்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

தெலங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கார் தலைமையில் மூன்று நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. 
தெலங்கானாவின் தேசிய நெடுஞ்சாலை


இந்த ஆணையம் விசாரிக்கும் போது, உரிய ஆதாரங்களோடு என்கவுன்ட்டர் செய்யப்பட்ட குற்றவாளி களின் குற்ற ஆவணங் களை ஒப்படைப்போம்.

குறிப்பாக தெலங்கானாவின் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள சங்காரெட்டி, ரங்காரெட்டி,

மஹ்பூப் நகர் ஆகிய பகுதிகளில் அரீப், சென்ன கேஷவலு ஆகிய இருவரும் பல்வேறு குற்றங்களை அரங்கேற்றி உள்ளனர்.

இவை கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. 

குற்றவாளிகள் இருவரின் செல்போன்கள் இருந்த டவர்களை கொண்டு 9 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்த இடங்களை கண்டறிந் துள்ளோம்.
பெண் கால்நடை மருத்துவர்


இந்த இரு குற்றவாளி களும் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர், திருநங்கைகள் உட்பட பல பெண்களை வன்கொடுமை செய்துள்ளனர். 

அவற்றில் பெண் கால்நடை மருத்துவர் உட்பட 9 பேரை மட்டும் எரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தடயவியல் துறையி னரிடம் இருந்து சைபராபாத் போலீசார் ஆதாரங்களை பெற்றுள்ளனர்.

அவை விரைவில் அறிக்கையாக சமர்பிக்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இது பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings