நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பானில் பிறந்த புத்தாண்டு !

0
டிசம்பர் 31 அன்று, இரவு 12 மணியை கடிகாரம் தொடும் போது உலகம் புத்தாண்டை வரவேற்கும். 
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பானில் பிறந்த புத்தாண்டு !


அந்த வகையில், பசிபிக் தீவுகளிலுள்ள சிறு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகளில் முதலில் கொண்டாடப் பட்டது. 

இதன் பிறகு, இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு, நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்றுள்ளன. 

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு, நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் முதலில் புத்தாண்டு பிறந்தது. அங்கு சிறப்பான வான வேடிக்கை களுடன், மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு மெல்பர்ன், சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு வரவேற்கப் பட்டது. இரவு 8.30 மணியளவில் ஜப்பானில் புத்தாண்டு கொண்டாடப் பட்டது. 

இந்த நாடுகளில், வான வேடிக்கையுடன் மக்கள் உற்சாகமாக 2020-ஆம் ஆண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

புத்தாண்டை எல்லாருக்கும் பிறகு, கடைசியாக வரவேற்க வேண்டிய நிலையில் உள்ள பகுதி, மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பேக்கர்ஸ் தீவு.

இந்திய நேரப்படி, எந்தந்த பகுதிகள், புத்தாண்டை வரவேற்கும் என்பதை பற்றிய ஒரு பார்வை:

பிற்பகல் 3:45 மணிக்கு, கேதம் தீவுகளில் புத்தாண்டு கொண்டாடப் பட்டது.


மாலை 4:30 மணிக்கு, நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பம்

மாலை 5:30 மணிக்கு, ரஷ்யாவின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடப் பட்டது.

மாலை 6:30 மணிக்கு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெர்ரா, ஹொனியாராவில் புத்தாண்டு கொண்டாடப் பட்டது


இரவு 7 மணிக்கு, அடிலெய்ட், ப்ரோக்கன் ஹில், செடுனாவில் புத்தாண்டு கொண்டாடப் பட்டது

இரவு 7:30 மணிக்கு, ஹகட்னாவின் போர்ட் மோரேஸ்பி, பிரிஸ்பேனில் புத்தாண்டு கொண்டாடப் பட்டது

இரவு 8 மணிக்கு, டார்வின், ஆலிஸ் ஸ்பிரிங்ஸ், டென்னன்ட் க்ரீக்கில் புத்தாண்டு வரவேற்கப் பட்டது

இரவு 8:30 மணிக்கு, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் டோக்கியோ, சியோல், பியோங்யாங், தில்லி, நாகெருல்முட் ஆகிய இடங்களில் புத்தாண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடப் பட்டது.

இரவு 9:30 மணிக்கு, சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் புத்தாண்டு வரவேற்கப் பட்டது. இரவு 10:30 மணிக்கு, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் புத்தாண்டு பிறந்தது.

இரவு 11 மணிக்கு மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டம்

இரவு 11:30 மணிக்கு, பங்களாதேஷில் புத்தாண்டு கொண்டாட்டம்


இரவு 11:45 மணிக்கு, நேபாளத்தின் காத்மாண்டு, போகாரா, பிரத்நகர், தரனில் புத்தாண்டு கொண்டாட்டம்

நள்ளிரவு 12:01 மணிக்கு, இந்தியாவில் புத்தாண்டு வெகு உற்சாகத்தோடு கொண்டாடப்பட உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லியில், புத்தாண்டை வரவேற்க மக்கள் கூடி யுள்ளனர்

ஜனவரி 1ம் தேதி, அதிகாலை 12.30 மணிக்கு, பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டம் அதிகாலை 1 மணிக்கு ஆப்கானிஸ்தானில் புத்தாண்டு கொண்டாடப்படும்

இதைத் தொடர்ந்து அஜர்பைஜான், ஈரான், மாஸ்கோ, கிரீஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. 

அதிகாலை 5.30 மணிக்கு பிரிட்டன் புத்தாண்டை வரவேற்கும் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை கனடா மற்றும் அமெரிக்காவில் புத்தாண்டு மணி ஒலிக்கும்

இதைத் தொடர்ந்து மார்குவேஸ் தீவுகள், அமெரிக்கன் சமோவா மற்றும் இறுதியில், மாலை 5:50 மணிக்கு பேக்கர்ஸ் தீவு புத்தாண்டை கொண்டாடும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings