கஷ்டம் என்று நெருங்கி வந்தார்.. மொத்தமாக என்னை ஏமாற்றி விட்டார்.. தொழிலதிபர் !

0
"கல்யாணம் ஆகவில்லை என்றார்.. பண கஷ்டம் என்றார்.. நான் தான் உங்க மனைவி என்று சொல்லி என்னிடம் நெருங்கி வந்தார்.. 
மொத்தமாக என்னை ஏமாற்றி விட்டார்.. தொழிலதிபர்


மொத்தமாக என்னை ஏமாற்றி விட்டார்" என்று தொழிலதிபர் ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை, ஐஐடி காலனியை சேர்ந்தவர் பாலசந்தர்.. 39 வயதாகிறது..

சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் இவர் ஒரு பெண்ணின் மீது புகார் தந்தார். அந்த புகாரில் அவர் சொல்லி உள்ளதாவது:

"எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 2015-ல் என் மனைவி இறந்து விட்டார். என் குழந்தைகள் மாமனார் வீட்டில் வளர்கிறார்கள். நான் வடபழனி, மும்பை, துபாய் ஆகிய இடங்களில் தனியார் நிறுவனங் களை நடத்தி வருகிறேன்.

சென்னை ஏர்போர்ட்

போன ஜுன் மாதம் துபாயிலிருந்து சென்னை ஏர்போர்ட் வந்தேன்.. அப்போது என்னை அழைத்துச் செல்ல வடபழனி ஆபீசில் வேலை பார்த்த பெண் வந்தார்.. அப்போதுன் முதன் முதலில் பார்த்தேன்.. 

அவர் பள்ளிக் கரணையில் தங்கி இருக்கிறார்.. உடன் பிறந்தவர்கள் பெங்களூரில் உள்ளனர் என்றும், பெற்றோரை இழந்த தனக்கு 38 வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை என்றார்.

2 குழந்தைகள்

2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் சொன்னார்.. வெளிநாடு செல்ல உள்ளதால் பயிற்சிக் காக என் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ள தாக சொன்னார்.. 
2 குழந்தைகள்


அவரது நிலைமையை பார்த்து பரிதாபம் வந்தது.. நெருங்கி பழகினோம்..

அவரும் தன்னை எம்டி என்றும் என் மனைவி என்றும் கம்பெனியிலும், கஸ்டமர் களிடமும் சொல்லி வந்தார்.

திருமணம்

அந்த பெண்ணை பற்றி என் அம்மாவிடம் சொல்லி, என் 2 குழந்தைகளுக் காக அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னேன். 

அம்மாவும் சம்மதம் சொன்னார்.. அம்மா தர சொல்லி தந்த 5 சவரன் செயினை அந்த பெண்ணுக்கு தந்தேன்.

7 லட்சம் ரூபா

ய்இந்நிலையில், திடீரென ஒருநாள் தன் வளர்ப்பு மகள் திருமணத்துக் காக 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதற்கு வட்டி கட்ட முடியவில்லை என்றார்.. 

அதனால், 60,000 ரூபாய் சம்பளத்தோடு கூடுதலாக 40,000 ரூபாய் எனக் கடந்த 6 மாதங்களாகக் கொடுத்தேன். என் வருங்கால மனைவி என்பதால், என் கிரெடிட் கார்டையும் அந்த பெண்தான் பயன்படுத்தி வந்தார்.

சிகரெட்

ஒருநாள், தன்னுடைய பாஸ்போட் பிளாக் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்லவும், அதை விடுவிக்க லட்சக் கணக்கில் செலவழித்தேன்.. சில நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொண்டோம்... 

அப்போது தான் அந்த பெண்ணுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம், தண்ணி அடிக்கும் பழக்கம் இருப்பது எனக்கு தெரிந்தது.. வருங்கால மனைவி என்ற முறையில் கண்டித்தேன்.. அதை அவர் கேட்கவே யில்லை..

பஞ்சாயத்து தலைவி
பஞ்சாயத்து தலைவி


இந்த சமயத்தில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் பழக்கம் வைத்திருப்பதை கண்டு பிடித்தேன்.

இது குறித்து, சம்பந்தப்பட்ட எஸ்ஐயிடம் நான் விசாரித்தேன்.. 

அப்போது தான் இந்த பெண்ணின் ஊர் ஈரோடு மாவட்டம், 2006- முதல் 2016 வரை பஞ்சாயத்து தலைவி யாக இருந்திருக்கிறார்..

இவருக்கு கல்யாணம் ஆகி, மகன், மகள் இருக்கிறார்கள் என்ற தகவலை கேட்டு அதிர்ந்தேன்.

மோசடி

ஆனால், அந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்து விட்டாராம்.. இது சம்பந்தமாக நான் கேள்வி கேட்கவும் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்.. என்னுடைய லேப்டாப், கிரெடிட் கார்டு, கொடுத்த பணம் எல்லா வற்றையும் கேட்டேன்... 

ஆனால், வடபழனி கோயிலில் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை ஸ்டேஷனில் காட்டி புகார் தருவதாக மிரட்டுகிறார்.. அவர் மீது நடவடிக்கை வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings