துருக்கியில் ஜமால் கசோகியை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை !

0
சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோகி (59), என்ற பத்திரிகை யாளர் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப் பட்டார்.
கசோகியை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை


சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படை யினரால் கசோகி கொல்லப் பட்டார் என்று பல தரப்பிலும் எழுந்த குற்றச் சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

எனினும், சர்வதேச அழுத்தத்துக்கு அடிபணிந்து ஜமால் கசோகி கொலை தொடர்பான விசாரணைக்கு சவுதி அரசு உத்தர விட்டது. 

இந்த கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் உள்பட 7 பேர் மீது ரியாத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.
சவுதி மன்னர் சல்மான்


இந்நிலையில், ஜமால் கசோகி கொல்லப் பட்டதில் நேரடி தொடர்புள்ள 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள தாகவும் 

பட்டத்து இளவரசர் உள்பட இருவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டதாகவும் சவுதி அரேபியா அரசின் தலைமை வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)