தப்பிக்கும் குற்றவாளிகளுக்கு விஐபி சலுகை -நாங்க என்ன செய்ய !

0
பொள்ளாச்சி யில் நடந்த காமக்கொடூரம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மறுபடியும் ஆவேசமாக வீதிக்கு வந்து கோப நெருப்பை கக்கி யிருக்கிறார்கள். 
தப்பிக்கும் குற்றவாளி

பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் குற்றவாளிகள் என சிறையில் இருக்கும் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரை 

குண்டர் தடுப்புச் சட்டத்த லிருந்து விடுவித்தது பொள்ளாச்சி நகர மக்கள் மத்தியில் கோபாவேச உணர்வை உருவாக்கி யிருக்கிறது. 

அவர்களை சமாதானப் படுத்த போலீசார் கடுமையாக பாடுபட்டிருக் கிறார்கள். போலீசார், ""நாங்கள் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து விடுவிக்க வில்லை. 

அவர்களை குண்டர் சட்டத்தில் போட நாங்கள் தான் உத்தர விட்டோம். உயர் நீதிமன்றம் தான் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்த லிருந்து விடுவித்தது. 

நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்ததோடு அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் முறைப்படி கொடுத்தோம். 

அவர்களது உறவினர்கள் நாங்கள் முறைப்படி ஆவணங் களை அவர்களுக்கு தரவில்லை என பொய் சொல்லி குண்டர் தடுப்புச் சட்டத்த லிருந்து தப்பித் திருக்கி றார்கள்'' என பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். 
விஐபி சலுகை

குண்டர் தடுப்புச் சட்டத்த லிருந்து காமக்கொடூர குற்றவாளி களை விடுதலை செய்தது தவறு. 

போலீசின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என சி.பி.எம்.மின் ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

போலீசார் அதற்கு அனுமதி மறுத்தார்கள். போலீஸ் அனுமதி வேண்டி மாதர் சங்க தோழர்கள் மாவட்ட எஸ்.பி.யான சஞ்சய்யிடம் பேசினார்கள். 

அவர், "அனுமதி கிடையாது. இது மேலிடத்து உத்தரவு'' என்று சொல்லி விட்டு "போலீசாரை இந்த விவகாரத்தில் ஏன் தேவை யில்லாமல் இழுக்கிறீர்கள்?'' என கேட்டுள்ளார். 

"உங்களுக்கு தொடர்பு இல்லை யென்றால் நீங்கள் குற்றவாளி களை குண்டர் தடுப்பு நடவடிக்கை யிலிருந்து விடுவித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 

மேல் முறையீடு செய்யாமல் ஏன் இருக்கிறீர்கள்? என மாதர் சங்க தோழர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பி.யால் பதில் சொல்ல முடிய வில்லை'' என்கிறார் ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட தலைவர் ராதிகா.

குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் விலக்கிக் கள்ளப் பட்டது, சிறையில் இருக்கும் காமக்கொடூர குற்றவாளி களான திருநாவுக்கர சையும் சபரி ராஜனையும் உற்சாகப் படுத்தி யுள்ளது. 

குற்றவாளிகள் நால்வரும் இதை சிறையில் சக கைதிகளுடன் கேக் வெட்டி கொண்டாட யிருக்கிறார்கள். 

சிறையில் வி.ஐ.பி. க்களுக்கு அளிக்கப்படும் ட்ரீட்மெண்ட்டை பெற்று வரும் பொள்ளாச்சி காமக்கொடூர குற்றவாளி களுக்கு 
கோவை சிறை

மேலும் அதிக சலுகை களை குண்டர் தடுப்புச் சட்ட விலக்கு கொடுத்துள்ளது என்கிறார்கள் கோவை சிறைவாசிகள். 

அதே போல் அந்த குற்றவாளி களுடன் சேர்ந்து காமக்கொடூர செயல்களில் ஈடுபட்ட மற்றவர்களும் உற்சாக மடைந்துள் ளார்கள்.

"இந்த குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்' என மாதர் சங்க தோழர்கள் ஒட்டிய போஸ்டர் களை பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளர்கள் கிழித்துள்ளனர். 

அதை கேள்விப்பட்டு மறுபடியும் போஸ்டர்கள் ஒட்டிய தோழர்களை போலீஸார் "பொது அமைதிக்கு குந்தகம் விளை வித்தார்கள்' என கைது செய்து வழக்குப் போட்டார்கள்.

உடனே அந்த பகுதி சி.பி.எம். தோழர்கள் தி.மு.க. வினரை சந்தித்து போலீஸ் அராஜகத்தை கண்டித்து ஒரு நள்ளிரவு போராட்டம் நடத்த அழைத்தார்கள். 

அதற்கு பதிலளித்த தி.மு.க. நிர்வாகி தென்றல் செல்வராஜ் "நாங்கள் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்ட த்தில் இருக்கிறோம். 

இந்த விவாகரத்துக் கெல்லாம் வர முடியாது என்று பதில் சொன்னார்கள்'' என வருத்தப் படுகிறார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள்.

அதற்கு மறுநாள் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பெயரளவில் தான் தி.மு.க. வினர் கலந்து கொண்டனர். அதற்கு நேர்மாறாக வி.சி.க. அதிக ஆட்களை திரட்டியது. 
சி.பி.ஐ. விசாரணை

ற்ற தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் பெயரளவில் கலந்து கொண்டன. மாதர்சங்க தலைவர் உ.வாசுகி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தை பார்க்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி விட்டனர்.

பொது மக்களும் ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பிய கோஷத்திற்கு ஆதரவாக கோஷமிட... வெறும் 100 பேரோடு தொடங்கிய ஆர்ப்பாட்டம் பெரும் திரள் ஆர்ப்பாட்டமாக மாறியது. 

கடைசியில், பொது மக்களை விலக்கி விட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய உ.வாசுகி உட்பட்ட தலைவர்களை மட்டும் கைது செய்து, அதன்பிறகு விடுவித்தது காவல்துறை.

சி.பி.ஐ. விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் வழக்கில் குற்றவாளி களுக்கு எதிராக திரண்ட பொது மக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட த்தில். பொள்ளாச்சி விவகாரத்தில் எடப்பாடி மற்றும் மோடி தலைமை யிலான ஆட்சியில் எந்த நியாயமும் கிடைக்காது. 

மத்திய மாநில அரசுகள் குற்றவாளி களை காப்பாற்ற முயற்சிக்கின்றன என்கிற முழக்கம் உயர்ந்திருக் கிறது'' என்கிறார்கள் பொள்ளாச்சி மக்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)