மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு !

0
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை பலம் கிடைக்க வில்லை.
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு

தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா, 2-வது பெரிய கட்சியான சிவசேனா, 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் ஆட்சி அமைக்க முடிய வில்லை.

இதை யடுத்து கடந்த 12-ந் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத் தப்பட்டது.

சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா, தேர்தலுக்கு பின்னர் முதல்- மந்திரி பதவி போட்டி யிலும், 

மந்திரி சபையில் சரிபாதி இடங்கள் கேட்டும் உருவான பிரச்சினை யிலும், அந்த கூட்டணியை விட்டு வெளியேறியது.

அதைத் தொடர்ந்து அந்த கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து, அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டது.

இந்த கூட்டணி கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே தலைமை யில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.

ஆனால் அதன் பின்னர் இரவோடு இரவாக அதிரடி திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்தன.

சற்றும் எதிர் பாராத வகையில், 105 இடங்களை பெற்றுள்ள பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவா ருடன் திடீர் கூட்டணி அமைத்து, 

ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோ‌‌ஷ்யாரி யிடம் உரிமை கோரியது. அதை யடுத்து, ஜனாதிபதி ஆட்சி நேற்று முன்தினம் அதிகாலை யில ரத்து ஆனது. 

உடனே பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் புதிய அரசு அமைந்தது. 

கவர்னர் மாளிகையில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பதவி ஏற்பு நிகழ்ச்சியில், தேவேந்திர பட்னாவிஸ் முதல் -மந்திரி யாகவும், 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்- மந்திரி யாகவும் பதவி ஏற்றனர்.

இது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் அக்கட்சிகள் கூட்டாக ஒரு ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்தன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)