டியூசன் படிக்க வந்த மாணவிக்கு ஆசிரியை கொடுத்த டார்ச்சர் !

0
சென்னையில் தன்னிடம் டியூசன் படித்த மாணவியை, தன்னுடைய காதலனே பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தை யாக இருந்த ஆசிரியை கைது செய்யப் பட்டுள்ளார்.
மாணவிக்கு ஆசிரியை கொடுத்த டார்ச்சர்


சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்பவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களு க்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். பாலாஜி என்பவரும் சஞ்சனாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சஞ்சனா விடம் பேசுவதை திடீரென பாலாஜி நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. தம்முடன் மீண்டும் பேச என்ன செய்ய வேண்டும் என பாலாஜி யிடம் சஞ்சனா கேட்டதாக சொல்லப் படுகிறது. 

சஞ்சனா விடம் டியூசன் படிக்கும் மாணவிகளை தாம் வன்கொடுமை செய்ய உதவினால் அவருடன் மீண்டும் பேசுவதாக பாலாஜி தெரிவித் துள்ளார்.

இதனை யடுத்து தம்மிடம் டியூசன் படித்த மாணவி ஒருவரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சஞ்சனா அழைத்துச் சென்றதாக தெரிகிறது. 

அவர்களுடன் பாலாஜியும் சென்றுள்ளார். அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாலாஜி, அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. 


அது மட்டுமின்றி சஞ்சனா விடம் பயிலும் சில மாணவிகளை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்ததா கவும் சொல்லப் படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சஞ்சனாவை யும் பாலாஜியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings