சுஜித் குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழப்பு !

0
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப் பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் 
சுஜித் குடும்பத்தில் உயிரிழப்பு


வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைப்பெற்ற மீட்பு பணியானது மக்கள் அனைவரும் பெரும் எதிர் பார்ப்போடு காத்திருந்த நிலையில் தோல்வியில் முடிவடைந்தது.

பின்னர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவன் சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அடக்கம் செய்யப் பட்டது. 

இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் சுர்ஜித் குடும்பத்தில் நான்கு மாதத்திற்கு முன்பு நடந்த துயர சம்பவம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

குழந்தை சுர்ஜித்தின் தந்தை ஆரோக்கிய ராஜின் பெரியப்பா மகன் ஜான் பீட்டர். அவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். 


ஜான் கடந்த மே மாதம் விடுமுறைக் காக வந்திருந்த போது வீட்டிலிருந்த கோழி ஒன்று அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் விழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி கோழியை தூக்கி வந்துள்ளார்.

அப்பொழுது எதிர் பாராத விதமாக கயிறு அறுந்தது. இதில் தலையில் அடிபட்டு ஜான் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சோகத்தி லிருந்து அவர்களது குடும்பம் மீண்டு வருவதற்கு முன்பே சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings