கட்டிலுக்கு அடியில் இருந்து பணம் கைப்பற்றப்படவில்லை - லீமா ரோஸ் !

0
தங்களது வீட்டில் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பலகோடி ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டதாக வெளியாகும் செய்தி உண்மையானது அல்ல என்று லீமா ரோஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
கட்டிலுக்கு அடியில் இருந்து பணம்


லாட்டரி அதிபர் மார்ட்டினை கொல்கத்தா விமான நிலையத்தில் பிடித்த, வருமான வரித்துறை அதிகாரிகள், அவருக்குச் சொந்தமான வீடு, சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 

கோவை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி உள்ளிட்ட 70 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்தச் சோதனை யின் போது, கணக்கில் வராத 595 கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், 619 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப் பட்டவைக் கான ஆவணங்கள் உள்ளிட்ட வற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது. 

இதே போல, கணக்கில் வராத 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 24 கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படு கிறது.

மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் மேற்கூரை, மரப்படிக் கட்டுகளில் பணம் மறைத்து வைக்கப் பட்டிருந்த வீடியோவையும் கட்டிலுக்கு அடியில் ஆவணங்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்த காட்சியையும் வருமான வரித்துறை வெளி யிட்டிருந்தது.
லீமா ரோஸ்


இந்நிலையில், தங்களது வீட்டில் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக் கட்டாக பலகோடி ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டதாக வெளியாகும் செய்தி உண்மை யானது அல்ல என்று லீமா ரோஸ் மார்டின் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், மார்ட்டின் குழும நிறுவனங்கள், ஊழியர் களின் இல்‌லங்கள் 

மற்றும் தங்கள் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது என்றும், அதில் 98 ஆயிரத்து 820 ரூபாய் மட்டுமே கைப்பற்றப் பட்டது எனக் குறிப்பிட் டுள்ளார். 

பணம் கைப்பற்றப் பட்டதை அடுத்து வருமான ‌வரித்துறையினர் வழங்கிய படிவத்தை வெளியிட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டின், வீட்டின் கட்டிலுக்கு அடியிலும், 

பாதாள அறையிலும் பணம் கைப்பற்றப் பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என விளக்கம் அளித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings