ஆஹா.. ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் தெரியுமா?

0
அண்மைக் காலமாக கடையை விளம்பரப் படுத்து வதற்காக வித்தியாசமான முறையில் வியாபாரிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன்


கடந்த மாதம் திண்டுக்கல்லில் 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்யப் பட்டது. இதை வாங்க காலை முதலே ஏராளமானோர் திரண்டனர்.

இதன் பரபரப்பு அடங்குவதற்குள் 10 பைசாவுக்கு பிரியாணியும், மற்றொரு கடையில் டிசர்ட்டும் வழங்கப்பட்டது. 

இவ்வாறு தங்கள் கடையை பிரபலப்படுத்த வியாபாரிகள் இது போன்ற வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர்.

இதே போன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பர்மா காலனியில் செயல்படும் மீன்கடை ஒன்றில் இன்று ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப் பட்டது.

இதையடுத்து காலை முதலே அப்பகுதியைச் சேர்ந்த அசைவ பிரியர்கள் கடையை முற்றுகை யிட்ட னர். முதலில் வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதனை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் கிடைத்ததால் வாடிக்கை யாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியதை பார்க்க முடிந்தது.

முதலில் வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு வழங்கியது ஏன் என்று கடை உரிமையாளர் பாலுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல். நான் காரைக்குடி யில் இன்று முதல் மீன்கடை தொடங்கி யுள்ளேன். 
காரைக்குடியில் 1 கிலோ மீன்


மீமிசல் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை அன்றே கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய உள்ளோம்.

மற்ற கடைகளில் விற்பது போல் பனிக்கட்டியில் வைத்து விற்பனை செய்ய மாட்டோம்.

புதிதாக மீன்கடை தொடங்கப் பட்டுள்ளதை காரைக்குடி மக்கள் அறியவும், அவர்களது மனதில் இடம் பிடிக்கவும் அன்று பிடிக்கும் மீன்களை அன்றே விற்பனை செய்கிறோம் 

என்பதை எடுத்துக் கூறவுமே இன்று எங்கள் கடைக்கு வந்த முதல் 100 பேருக்கு கிலோ 1 ரூபாய்க்கு வழங்கினோம். 

அதன் பின்னர் வந்தவர் களுக்கு லாபம் இல்லாமல் கொள்முதல் விலையில் வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings