ஆழ்துளை கிணறு மரணங்களை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு !

0
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே யுள்ள நடுக்காட்டுப் பட்டி பகுதியில் 2 வயது ஆண் குழந்தை சுஜித் மூடப்படாத ஆழ்துளை குழாயில் தவறி விழுந்ததும் 
ஆழ்துளை கிணறு மரணம்


அவனை மீட்பதற்கு சுமார் 100 மணி நேரம் நடைபெற்ற அசுர முயற்சிகள் தோல்வியில் முடிந்ததும் மக்களை திகைப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

தொடர்ந்து, அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்று க்குள் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு என பல்வேறு மரணச் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

குறுகிய துளைக்குள் விழுந்த இளந்தளிர் களின் உடலை முரட்டுத் தனமாகப் பற்றி, வெளியே தூக்குவது இயலாத காரியம் என்பதால்

குழந்தை களை உயிருடன் வெளியே எடுக்கும் காரியம் போதுமான உபகரணங்கள் இல்லாததால் பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்து வருகிறது.

இந்நிலையில், மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்டம், பீபீக்குளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் குடை வடிவில் புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார்.


ஆழ்துளை குழாய்க்குள் மூடப்பட்ட குடையாக தலைகீழாக செலுத்தப்படும்

இந்த கருவி, அதில் விழுந்து கிடந்த ஒரு பொம்மையை சேத மேதுமின்றி வெளியே எடுக்கும் செயல்முறை விளக்கத்தை அப்துல் ரசாக் செய்து காட்டினார்.

தலை கீழாக உள்ளே செலுத்தப்படும் இந்த மெல்லிய குடைபோன்ற கருவி, உள்ளே இருக்கும் பொம்மையை கடந்து சென்ற 

பின்னர் பொத்தானை இயக்கி குடையை விரிப்பது போல் விரிவடையச் செய்ததும் சிக்கி யிருந்த பொம்மை விரிந்த குடையின் மீது அமர்ந்தவாறு வெளியே வந்தடைகிறது.

இந்த கருவியின் பலனும் பலமும் அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் சிறப்பாக அமைய வாழ்த்தும் அதே வேளையில் இதை உருவாக்கி யுள்ள மதுரை அப்துல் ரசாக், 

ஏற்கனவே இது போல் மேலும் பல கண்டு பிடிப்புகளை அறிமுகப் படுத்தி யுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings