எடையை குறைக்கும் உணவு முறை !

0
பெரும் பாலானோருக்கு இன்று எடையைக் குறைப்பது தான் ஒரே கவலை. என்ன சாப்பிடுவது, எதை சாப்பிடாமல் விடுவது என்று ஏக குழப்பம். உடல் பருமன் என்பது எதுவென்று புரிந்து கொள்வதும், 
உணவு முறை
அதற்கான காரணங் களையும் அறிந்து கொண்டால் உணவு முறையையும் கண்டு பிடித்து விடலாம்..

உணவு முறை இப்படி இருக்கலாம்!

* எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கலோரிகள் அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும். ஒருவரது உடல் இயக்கத்தின் பொருட்டே உணவை உட்கொள்ள வேண்டும். 

இதில் ஒருவரது எடை, தேவைப்படும் எனர்ஜி அளவு போன்ற வற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* புரதச்சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். அது எடையை குறைக்க உதவும். புரத உணவு பசியை குறைக்கும். முடிந்த அளவில் Vegetarian source protein foods உண்பது மிகவும் சிறந்தது. 
அதில் கொழுப்பு குறைவாக இருக்கும். நார்ச்சத்து மற்றும் புரதம் மிகுந்து இருக்கும். Eg : பருப்பு, பயிறு வகைகள், நட்ஸ், பால் மற்றும் பால் பொருட்கள்.

* அதிக கொழுப்புள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நல்ல கொழுப்புள்ள சமையல் எண்ணெய்களை பயன் படுத்தவும்.

* ஒரு நாளைக்கு 50 - 55% மாவுச் சத்துக்களை கலோரியில் இருந்து பெற வேண்டும். மைதா, சர்க்கரை போன்ற வற்றைத் தவிர்க்க வேண்டும்.

* வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். அது எடை குறைக்க உதவும். ஆனால், உப்பு குறைவாக எடுக்க வேண்டும். 

தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். கூல் டிரிங்க்ஸ், மது ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சியின் நன்மைகள்
உடற்பயிற்சியின் நன்மை
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும், கொழுப்பைக் குறைக்கும், வயதாவதை குறைக்கும். எலும்பை வலுமை யாக்கும், புற்று நோயை தடுக்கும், சர்க்கரை மற்றும் இதய நோயை கட்டுப் படுத்தும்.

உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளக் கூடியவை

தோல் சீவாத பழங்கள், கொழுப்பு நீக்கிய பால், சர்க்கரை இல்லாமல் டீ, காபி, ரசம், மோர், இளநீர், காய்கறிகள், முழு தானியங்கள், கீரை வகைகள், தெளிந்து

வடிகட்டிய சூப், ஓட்ஸ், பார்லி, சிறுதானியம், பயிர்கள்.

உணவில் கட்டுப்படுத்த வேண்டியவை

கிழங்கு வகைகள், முந்திரி பருப்பு, இனிப்பு பண்டங்கள், கேக், சாக்லெட், ஜாம், ஐஸ்கிரீம், தேங்காய், தேங்காய் பால், சமையல் எண்ணெய் ஒரு நாளைக்கு 4-5 தேக்கரண்டி வரை தான் பயன்படுத்த வேண்டும், 

சாதம், ஆட்டு இறைச்சி, இறால், நண்டு மற்ற இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, கொழுப்புள்ள பால், தயிர்.

உணவில் தவிர்க்க வேண்டியவை
உணவில் கட்டுப்படுத்த வேண்டியவை
கிரீம், சீஸ், வெண்ணெய், நெய், கொழுப்புள்ள இறைச்சி, எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை, குளிர் பானங்கள், தேன், வெல்லம், மதுவில் கலோரியைத் தவிர வேறு எந்த சத்தும் இல்லை. எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

சில முக்கிய குறிப்புகள்

விரதம் இருக்கக் கூடாது, தண்ணீர் நிறைய பருக வேண்டும், மூன்று வேளையும் உணவை தவறாமல் சாப்பிட வேண்டும், உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும், அளவாக சாப்பிட வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)