மாட்டிறைச்சி தின்றால் நாய்க்கறி சாப்பிடவும் - பாஜக தலைவர் !

0
மேற்கு வங்காள மாநிலத்தின் பாஜக தலைவர் திலிப் கோஷ். இவர் மெடினிபூர் பாரளுமன்ற தொகுதி எம்.பி.யும் ஆவார். 
நாய்க்கறி சாப்பிடவும்


கொல்கத்தாவி லிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பர்த்வான் நகரில் நேற்று நடைபெற்ற “கோபா அஷ்டமி காரியக்ரம்” என்ற நிகழ்ச்சியில் திலீப் கலந்து கொண்டார்.

அப்போது நிரூபர் களுக்கு பேட்டி அளித்த திலிப் கோஷ் கூறியதாவது:-

சில அறிவாளிகள் சாலையில் வைத்து மாட்டிறைச்சி உண்கிறார்கள்.

அவர்கள் நாய்க்கறி யும் சாப்பிட வேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். அவர்கள் எந்த இறைச்சி வேண்டு மானாலும் உண்ணட்டும். 

அதை அவர்கள் வீட்டில் வைத்து உண்ணாமல் ஏன் சாலைகளில் உண்ண வேண்டும்? பசுக்களை இழிவு படுத்துவதும் கொல்வதும் இந்தியாவில் குற்றம். இந்திய மாடுகளின் பாலில் தங்கம் உள்ளது. 

அதனால் தான் இது தங்க நிறத்திலும் ஆரோக்கிய மாகவும் இருக்கிறது. வெளிநாட்டு மாடுகள் அவ்வாறு அல்ல. அவற்றின் பாலும் ஆரோக்கி யமானது அல்ல.


சில அறிவாளிகள் பசுவை தாயாக வணங்குவது அவமானம் எனவும்,

ஆனால் வெளிநாட்டு நாய்களின் மலத்தை சுத்தம் செய்வது பெருமை எனவும் நினைக்கி றார்கள். 

என் தாயை யாரவது சீண்டினால் அவர்களை நடத்த வேண்டிய விதத்தில் நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இம்மாதிரியான கருத்துக் களுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்.

இத்தகைய பைத்தியக் காரத்தனமான கருத்து களுக்கு மேற்கு வங்காள மக்களே நல்ல நீதிபதியாக இருந்து பதிலளிப்பார்கள், 

என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுபர்தா முகர்ஜி இது குறித்து கருத்து தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings