இன்னைக்கு ஊரே பேசும் துணை முதல்வர் வந்த கார் ஏன் தெரியுமா?

0
துணை முதல்வர் வந்த கார் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஊரே பேசும் துணை முதல்வர் வந்த கார்


இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பிரபலப் படுத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு இந்த விஷயத்தில் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. 

பெட்ரோல், டீசல் வாகனங்க ளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் தான், எலெக்ட்ரிக் வாகனங் களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப் படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்க ளால், சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப் படுகிறது. தற்போது இந்தியாவின் பல்வேறு பெரு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி திணறி வருகின்றன. 

இந்த பிரச்னையை சரி செய்ய எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவும். சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது என்பது எலெக்ட்ரிக் வாகனங்களின் சிறப்பம்ச மாக பார்க்கப் படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவும்
எனவே மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் அறிவிக்கப் பட்டுள்ளன. 

மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் ஆகிய வற்றை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். 

மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங் களை பிரபலப் படுத்தி வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநில அரசுகளை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். 
இந்தியா திட்டத்தின் கீழ் மானியம்


இதில், பீகார் மாநில சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் எலெக்ட்ரிக் காரில் வந்து இந்த கூட்ட தொடரில் கலந்து கொண்டார்.

பொது மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க வேண்டும் என்பதற் காக அவர் எலெக்ட்ரிக் காரில் வந்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த காரில் பயணம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் கிட்டத்தட்ட சத்தமே வரவில்லை. இந்த காருக்கு உள்ளே அமர்ந்திருக்கும் போது, அதன் டிசைன் மிகவும் சௌகரியமாக இருக்கிறது' என்றார்.
நிதிஷ் குமார்
இந்த சூழலில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற் காக பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் தற்போது எலெக்ட்ரிக் காரில் வந்துள்ளார். 

பீகார் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ப தற்காகவே, டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வந்தார்.

இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வசம் தான் சுற்றுச் சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனம் ஆகிய துறைகள் உள்ளன. 
பீகார் துணை முதல்வர்
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், சுஷில் குமார் மோடி இனி மின்சார வாகனத்தில் தான் பயணம் செய்வார் என அவரது அலுவலகம் தெரிவித் துள்ளது.

இஇஎஸ்எல் எனப்படும் எனர்ஜி எஃபிசியன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத் திடம் இருந்து (EESL - Energy Efficiency Services Ltd), பீகார் மாநில அரசு 9 எலெக்ட்ரிக் கார்களை 

ஐந்து ஆண்டு களுக்கு லீசுக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. சபாநாயகர், தலைமை செயலாளர் ஆகியோரால் இந்த கார்கள் பயன் படுத்தப்படும்.
எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள்
சுற்றுச் சூழலை பாதுகாப்பதற் காக பெட்ரோல், டீசல் வாகனங் களுக்கு பதில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை பயன் படுத்துவது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற் காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக பொது மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என பீகார் மாநில அரசு நம்புகிறது.

ஏனெனில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சட்ட மன்றத்திற்கு எலெக்ட்ரிக் காரில் வந்த சமயத்தில் அந்த செய்தி பலரையும் சென்றடைந்தது. 
துணை முதல்வர் சுஷில் குமார் மோடி


தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்த தொடங்கி யிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக பலரும் பேச தொடங்கி யுள்ளனர்.

பிஹார் மாநிலத்தின் துணை முதலமைச்சரைப் போன்று, நம்முடைய தழிகத்தின் முதலமைச் சரான எடப்பாடி பழனிசாமியும் அண்மையில் புத்தம் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரில் வலம் வந்தார். 

இந்த கார் எத்தகைய சிறப்பான தாக மற்றும் அதில் முதலமைச்சர் பழனிசாமி வலம் வந்ததற்கான காரணத்தையும் கீழே பார்க்கலாம்.
கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்
கடந்த ஜுலை 9ம் தேதி ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப் பட்டது. 

ரூ.25.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இந்திய வாடிக்கை யாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

அறிமுகம் செய்யப்பட்ட தினத்தி லிருந்து முதல் 10 நாட்களில் 120 பேர் இந்த காரை முன்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து முன்பதிவு அதிகரித்து வருகிறது.
புதிய கோனா எலெக்ட்ரிக் கார்
இந்த நிலையில், புதிய கோனா எலெக்ட்ரிக் கார் முக்கிய உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சென்னை அருகே ஸ்ரீபெரும் புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலையில் அசெம்பிள் செய்யப் படுகிறது. 

இந்தநிலையில், முன்பதிவு செய்த வாடிக்கை யாளர்களுக்கு டெலிவிரி கொடுப்பதற் கான பணிகளை ஹூண்டாய் துவங்க இருக்கிறது.

அதன்படி, சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட கோனா எலெக்ட்ரிக் காரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற் கான பணியை இன்று தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் துவங்கி வைத்தார்.
மாசு உமிழ்வு இல்லாத கார்
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தொழிற்துறை அமைச்சர் சம்பத், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உள்ளே அமர்ந்து சிறிது தூரம் பயணித்தனர்.

மஹிந்திரா, டாடா உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தாலும், தனிநபர் பயன் பாட்டிற்கு ஏற்ற மிகச் சிறப்பான அம்சங்க ளுடன் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் கோனா கார் வந்துள்ளது. 
தொடு திரையுடன் கூடிய இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம்


விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு மதிப்புமிக்க ஏராளமான அம்சங்களை இந்த மாசு உமிழ்வு இல்லாத கார் பெற்றிருக்கிறது.

மின்சார கார் என்பதுடன், இந்த எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி ரகத்தில் வந்திருப்பது சாதகமான முதல் விஷயம். எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் இடம் பெற்றிருக் கின்றன. 

ஆனால், எலெக்ட்ரிக் கார் மாடல் என்பதால், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் பெறும் வகையில், முகப்பில் க்ரில் அமைப்பு இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்
புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 8.0 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். தவிரவும், 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் ஹீட்டடு மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், 10 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய 
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
டிரைவர் சீட் அட்ஜெஸ்ட் வசதி, லெதர் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹீட்டடு வசதியுடன் சைடு மிரர்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட சிறப்பம் சங்களை பெற்றுள்ளது.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், 

ரியர் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ரியர் டீஃபாகர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 
லித்தியம் அயான் பேட்டரி
மேலும், பெட்ரோல், டீசல் கார்கள் போன்று செயற்கையாக சப்தத்தை தரும் சவுண்ட் சிஸ்டமும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 136 எச்பி பவரையு், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப் பட்டுள்ளது. 

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 9.7 வினாடிகளில் எட்டி விடும். இந்த காரில் 39.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.
சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்கும்


இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதும் ஆகச் சிறந்த விஷயம். ஆனால், நடைமுறை பயன்பாட்டில் இந்த ரேஞ்ச் குறையும் வாய்ப்பும் இருக்கிறது. 

எனினும், பிற எலெக்ட்ரிக் கார் மாடல்களை விட இது மிகச் சிறப்பான ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது வரம்பில்லா கிலோ மீட்டர்களுக் கான பொது வாரண்டி வழங்கப் படுகிறது. 

பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப் படுகிறது. புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வெள்ளை, நீலம், சில்வர் மற்றும் கருப்பு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. 
துணை முதல்வர் வந்த கார்
தவிரவும், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தி லான இரட்டை வண்ணக் கலவையிலும் இந்த கார் கிடைக்கிறது. இரட்டை வண்ணக் கலவை மாடலுக்கு ரூ.20,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் மின்சார கார்களை தயாரிக்கும் பணிகளுக் காக தமிழக அரசுடன் ஹூண்டாய் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. 

மின்சார கார் உற்பத்திக்காக தமிழகத்தில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, முதல் மாடலாக ஹூண்டாய் கோனா கார் உற்பத்தி செய்யப் படுவது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)