ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ பட்டியல் வெளியீடு !

0
மஹா., மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஜார்கண்ட்டில் சட்டசபை தேர்தல் நவ.,30 ல் தொடங்குகிறது. 
ஜார்கண்ட்டில் சட்டசபை தேர்தல்


இது குறித்த ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று (நவ.,10) நடந்தது. இந்த கூட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் லக்ஷ்மன் கிலுவா, முதலமைச்சர் ரகுபார் தாஸ், 

தேர்தல் பொறுப்பாளர் ஓ.பி. மாத்தூர் மற்றும் தேர்தல் இணை பொறுப்பாளர் ராம் விச்சார் நேதம் ஆகியோருடன் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா கலந்து கொண்டார்.

தேர்தல் குறித்த அறிவிப்பை பா.ஜ செயல் தலைவரான ஜே.பி நட்டா அறிவித்தார். ஜார்கண்டில் முதல்வர் ரகுபர் தாஸ் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த பணிகளைப் பாராட்டினார்.
ஜார்கண்டில் தேர்தல் பட்டியல் 1


ஜார்கண்டில் தேர்தல் 5 கட்டங்களாக நடக்க உள்ளது. நவ.,30 ல் துவங்கி டிச.,20 வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். தேர்தல் தேதிகளை அறிவிப்பதன் மூலம் ஜார்கண்டில் இன்று முதல் மாதிரி நடத்தை விதிமுறை அமைக்கப் பட்டுள்ளது. 

அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு 13 இடங்களுக்கு நவ., 30 ம் தேதியும், இரண்டாம் நிலை டிச., 6 ஆம் தேதி 20 இடங்களுக்கும், மூன்றாம் கட்டம் டிச., 12 ஆம் தேதி 17 இடங்களுக்கும், நான்காம் கட்டமாக 16 இடங்களுக்கும் நடைபெறும். 
ஜார்கண்டில் தேர்தல் பட்டியல் 2


கடைசி கட்டமாக டிச., 20 ம் தேதி மற்ற இடங்களு க்கும் நடைபெறும் எனவும் ஓட்டு எண்ணிக்கை டிச., 23 ஆம் தேதி நடைபெறும் எனவும் கூறப்படு கிறது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், தற்போது 52 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களின் பட்டியலை பா.ஜ வெளி யிட்டுள்ளது. 

அம்மாநில முதல்வரான ரகுபார் தாஸ், ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் போட்டி யிடுகிறார். தொடர்ந்து மாநில பா.ஜ தலைவரான லட்சுமண் கிலுவா, சக்ரதார்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜார்கண்டில் தேர்தல் பட்டியல் 3
காங்., கட்சியும் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களை அறிவித்துள்ளது. லோஹர்தகாவில் மாநில காங்., தலைவர் ரமேஷ்வர் ஆரோன் போட்டி யிடுவதாக கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings