கொத்தடிமையாக இருந்து அமெரிக்கா வரை சென்ற பெண் !

0
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். 
கொத்தடிமையாக இருந்து அமெரிக்கா சென்ற பெண்

ஒன்று மற்ற ஒரு வெளிய லிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக் குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 16வது அத்தியாயம் இது.)

நிகழ்காலம் துயர் தோய்ந்து இருக்கும் போது, எதிர்காலம் மட்டும் எப்படி இருந்துவிடப் போகிறது? இந்த இருள் தான், இந்த வலிதான், 

இந்த காயம் தான் இனி எப்போதும் இருக்கப் போகிறது என்று அனைவரும் நம்பிய போது, அதிலிருந்து மீண்டு பலரை மீட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்ணின் கதை இது.

பச்சையம்மாள் - வினைச் சொல்லாகிப் போன பெயர்ச்சொல் இது.

யார் இந்த பச்சையம்மாள்?
கொத்தடிமையாக இருந்த பெண்

பச்சையம்மாள், காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாச்சேரியை சேர்ந்த இருளர் இனப் பெண்.

பத்தாயிரம் ரூபாய் கடனுக்காகப் பல ஆண்டுகள் கொத்தடிமை யாக ஒரு கல் குவாரியில் வேலைப் பார்த்து இருக்கிறார். 

இவர் மட்டும் அல்ல, இவருடன் நூற்றுக் கணக்கான மக்கள் அந்த கல்குவாரி யில் கொத்தடிமை யாக வேலை பார்த்து இருக்கி றார்கள். 

வெறும் சொற்ப கடனுக்காகக் கல் உடைப்பது முதல் விவசாய வேலை வரை பார்த்து இருக்கிறார்கள்.

"கல்குவாரி யிலேயே வாழ்க்கை முடிந்துவிடப் போகிறது. இனி எல்லாம் அவ்வளவு தான்," என்று அனைவரும் நம்பிய போது, பச்சையம்மா ளுக்கு மட்டும் சிறிது நம்பிக்கை இருந்திருக் கிறது. 

இதற்கு வெளியில் ஓர் உலகம் இருக்கிறது. அங்கு நமக்கான வாழ்க்கையும் இருக்கிறது என நம்பி இருக்கிறார். அவர் நம்பிக்கை வீண் போக வில்லை.

ஒரு அரசு சாரா அமைப்பு மூலம் விஷயம் தெரிந்து வந்த அரசு அதிகாரிகள், அந்த கல்குவாரி யிலிருந்த அத்தனை பேரையும் மீட்டு இருக்கிறார்கள்.

பச்சையம் மாளும் மீண்டு இருக்கிறார்.
செங்கல் சூளை

பசியின் ருசி" எங்களை மீட்ட அதிகாரிகள், அன்று எங்கள் அனைவருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தார்கள். 

இன்னும் அந்த பிரியாணி யின் சுவை எங்கள் நினைவில் இருக்கிறது. எங்கள் வாழ்வில் சாப்பிட்ட முதல் பிரியாணியும் அதுதான்," என்கிறார் பச்சையம்மாள்.

பச்சையம்மாள் மீண்டு விட்டார். இதனுடன் முற்றுப் பெற்றிருந்தால், இந்தக் கட்டுரைகள கான தேவை இருந்திருக்காது. 

பல நூறு பேரை மீட்டார்கள், அதனுடன் பச்சையம் மாளும் மீண்டார் எனும் ஒரு பத்தி செய்தியாகக் கடந்து போயிருக்கும்

ஆனால், இந்தப் புள்ளியில் பச்சையம்மாளின் வாழ்வு மாறி இருக்கிறது. நூற்றுக் கணக்கான கொத்தடிமை களின் வாழ்வும் இருளி லிருந்து வெளிச்சத்து க்கு வந்திருக்கிறது

ஒளியாக பச்சையம்மாள்
கல்குவாரி

கொத்தடிமை யாக இருந்து மீண்ட பச்சையம்மாள் தன் வாழ்வு மாறி இருக்கிறது. 

இன்னும் எத்தனை பேர் தமக்குத் தெரிந்தே பல்வேறு குவாரிகளில், செங்கல் சூளைகளில் கொத்தடிமை களாக இருக்கிறார்கள்.

அவர்களை மீட்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறார்.

சர்வதேச நீதி மையம் எனும் அரசு சாரா அமைப்பு பச்சையம்மா ளுக்கு சில அடிப்படை பயிற்சிகளை அளித்திரு க்கிறது.

அதன்பின், பச்சையம்மாள் அரசாங்கத்தின் பல்வேறு துறை களுடன் இணைந்து நூற்றுக் கணக்கான கொத்தடிமை களை மீட்டிருக்கிறார். 

அவர்களின் மேம்பாட்டுக் காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக் கிறார். பச்சையம்மாள், "2014ஆம் ஆண்டு கொத்தடிமை களுக்கான மறுவாழ்வு சங்கம் தொடங்கினோம். 

கொத்தடிமை யாக இருப்பவர் களைக் கண்டுபிடிப்பது, கொத்தடிமை யாக இருப்பவர் களை அரசாங்கத் தின் துணையுடன் மீட்பது, 

மீட்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ரேஷன் கார்டு, வீட்டுப்பட்டா உள்ளிட்ட வற்றை வாங்கி, மீண்டும் அவர்கள் கொத்தடிமை யாக மாறாதவாறு 
அடிமைகள்

அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகிய நான்கு நோக்கங் களை முதன்மை யாக வைத்து சங்கம் செயல் படுகிறது," என்கிறார்.

இதுவரை நூற்றுக்கும் அதிகமான கொத்தடிமை களை மீட்டு இருக்கிறார் பச்சையம்மாள்.

அமெரிக்காவில் அண்மையில் அரசு சாரா அமைப்பு ஒருங்கிணைத்த ஆளுமை களுக்கான மாநாட்டில் இந்தியா விலிருந்து சென்ற ஒரே பெண் பச்சையம்மாள்.

"எங்களுக்கென ஒரு ஆசை இருக்கிறது. கொத்தடிமை யாக நாங்கள் அனுபவித்த துயரங்களை, இனி யாரும்படக் கூடாது. இந்த ஆசைதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது," என்கிறார் பச்சையம்மாள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings