சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறை வைத்தல் தொடர்பான வழக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அங்குள்ள அவரது ஆசிரம கிளை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தி 4 குழந்தைகளை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் அந்த ஆசிரம நிர்வாகிகளான 2 பெண் சீடர்களை போலீசார் கைது செய்தனர்.
நித்யானந்தா வின் அந்த ஆசிரமம் பள்ளி ஒன்றின் வளாகத்தில் செயல்பட்டு வந்தது. எனவே அந்த பள்ளியின் முதல்வரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் நித்யானந்தா வின் ஆசிரமத்துக்கு இடம் அளித்தது தொடர்பாக பதிலளிக்குமாறு அந்த பள்ளிக்கு ஆமதாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும் பள்ளி கட்டுவதற்கு வழங்கப்பட்டு இருந்த தடையில்லா சான்றிதழில் நிலத்தின் விவரங்கள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் பாண்டே தெரிவித்தார்.
எனவே இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
முன்னதாக பள்ளி நிலத்தை நித்யானந்தா ஆசிரமத்து க்கு குத்தகைக்கு அளித்தது எப்படி? என மாநில கல்வித் துறையிடம் சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் விளக்கம் கேட்டுள்ளது.


Thanks for Your Comments