ஆழ்துளை கிணறுக்கு ரூ.6 கோடி வரை மின்கட்டணம் - உள்ளாட்சி அமைப்புகள் !

0
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப் பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்கிற 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
மணப்பாறை


இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு தமிழக அரசு உத்தர விட்டது. 

அதன் பேரில் கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு களுக்கு பல ஆண்டுகளாக அந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் லட்சக்க ணக்கான ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இது குறித்த விவரங்களை கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:-
தகவல் அறியும் உரிமைச் சட்டம்


கோவை பகுதியில் சில மாதங்களாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு களுக்கு மின்சார கட்டணம் செலுத்தப் படுவது தெரிய வந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் ஆழ்துளை கிணறுகள் தோண்டும் போது மின்சார வாரியத்திடம் மின் இணைப்பு பெறப்படுகிறது.

இதற்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ. 120 வீதம் கட்டணம் செலுத்தப் படுகிறது. 

பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் 10 கிலோ வாட் திறன் அடிப்படையில் இணைப்புகள் பெறப்பட்டன. குறிப்பாக மேட்டுப் 

பாளையம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை ரூ.4,200 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 3,396 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு களுக்கு ஒரு யூனிட் கூட மின்சாரம் பயன்படுத்தாத நிலையில் 
ஆழ்துளை கிணறுகள்


2 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 28 லட்சம் மின்சார கட்டணத்தை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துவது தெரிய வந்துள்ளது.

இதே போல தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற மற்றும் உபயோகப் படுத்தாத ஆழ்துளை கிணறு களுக்கு ரூ. 6 கோடி வரை மின்சார கட்டணம் செலுத்தப் படுவது அதிகாரிகள் தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.

சில இடங்களில் கடந்த 2007-ம் ஆண்டு முதலே பயன் படுத்தப்படாத, மூடப்பட்ட ஆழ்துளை கிணறு களுக்கு மின்சார கட்டணம் செலுத்தப் படுவதாக கூறப்படுகிறது.

எனவே தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் எந்தெந்த ஆழ்துளை கிணறுகள் செயல் படுகின்றன? எவை பயன்பாடு இல்லாமல் உள்ளன? 

என்பது போன்ற விவரங்களை சேகரித்து அவற்றிற்கு மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறதா? என சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)