டிரம்ப் மீது கற்பழிப்பு புகார் - 23 ஆண்டுக்கு முன் கற்பழித்தார் !

0
டிரம்ப், பாலியல் புகார், கரோல், நியூயார்க்: 23 ஆண்டு களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னை கற்பழித்தார் என பெண் ஒருவர் தற்போது வழக்கு தொடர்ந் துள்ளார்.
டிரம்ப் மீது கற்பழிப்பு  புகார்


ஜீன் கரோல் என்பவர், சில மாதங்களுக்கு முன் எல்லே என்ற பத்திரிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டார். 

அதில், 1995, 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் டிரம்ப் தன்னை தாக்கி கற்பழித்தார் என கூறியிருந்தார்.

இதற்கு, வெள்ளை மாளிகை சார்பில் வெளியான விளக்கத்தில், டிரம்பின் ஒருமைப்பாடு, நேர்மை மற்றும் கவுரவத்தை இழிவுப் படுகிறார். 

இந்த வழக்கு செய்தி வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை போல அற்பமானது. அந்த குப்பை புத்தகத்தை விற்பதற்காக இது போன்று முயற்சிக்கி றார்கள், என குற்றம் சாட்டியது.


இது குறித்து கரோல் தற்போது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், டிரம்ப் தன்னை தாக்கிய தாகவும்,

மூன்று நிமிடத் தாக்குதலுக்கு பின் உடை மாற்றும் அறைக்கு தான் ஓடியதாக வும் குறிப்பிட் டுள்ளார். 

மேலும், டிரம்பின் பழி வாங்கலுக்கு பயந்தே இது குறித்து எந்த அதிகாரிகளிடமும் தெரிவிக்க வில்லை எனவும் கூறியுள்ளார். 

டிரம்ப் மீது பாலியல் குற்றச் சாட்டுகள் வருவது புதிதல்ல. அவர், அரசியலுக் குள் நுழைவதற்கு முன்பே கிட்டத்தட்ட 12 பெண்கள் புகார் கூறியும் அதை மறுத்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings