பாலியல் வல்லுறவு துயரக் கதையைச் சொல்லும் பெண் !

0
எமிலி டோ பற்றி நமக்கு என்ன தெரியும்? 2015 ஜனவரியில் ஒரு நாள் இரவு அமெரிக்காவில் கலிபோர்னியா வில் ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் ஆண் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் 
துயரக் கதையைச் சொல்லும் பெண்


நட்சத்திர நீச்சல் வீரர் புரோக் டர்னர் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் என்று நமக்குத் தெரியும். சுயநினைவு இழந்த நிலையில், அரைகுறை ஆடை களுடன் பெரிய குப்பைத் தொட்டி அருகே அவர் கிடந்தார்.

போதையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாக்கியது, சுய நினைவு இழந்த பெண்ணைத் தாக்கியது, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது ஆகிய செயல் களுக்காக புரோக் டர்னருக்கு ஆறு மாத காலம் சிறைத் தண்டனை கிடைத்தது.

புரோக் டர்னருக்கு மூன்று மாத காலம் சிறையில் இருந்தார். அடுத்த மூன்று ஆண்டு காலம் நன்னடத்தை கண்காணிப்பில் விடுதலை செய்யப் பட்டார். அது செப்டம்பர் மாதம் முடிந்தது. 

அந்த வழக்கில் தீர்ப்பளித்த ஆரோன் பெர்ஸ்கி பின்னர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். டர்னர் நல்ல நடத்தை உள்ளவர் என்றும், அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது என்றும் கூறி அந்தத் தீர்ப்பை அவர் அளித்துள்ளார்.

டர்னர் நட்சத்திர நீச்சல் வீரர் என்ற உண்மை குறித்து அந்த சமயத்தில் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. சேனல் மில்லரை பற்றி நமக்கு என்ன தெரியும்? 

அநேகமாக உங்களுக்கு இன்னும் நிறைய தெரிந்திருக்காது. பாதிக்கப் பட்டவரின் அறிக்கையாக டர்னருக்கு அவர் எழுதிய கடிதம் அப்போது வைரலாகியது. பெயரை வெளியிடக் கூடாது என்பதற்காக அப்போதும் அவர் எமிலி டோ என்றே அழைக்கப் பட்டார். 


அந்தக் கடிதத்தில் உள்ள விஷயங் களைப் படித்தால் அவர் துணிவானவர், தெளிவாக கருத்துகளை வெளியிடக் கூடியவர் என்பதை அறியலாம். சேனல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அவர் மொழிப்பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர். இப்போது - 'என் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (Know My Name) - என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவர் கலைத் திறமை உள்ளவர்.

குழந்தை களுக்கான புத்தகங் களுக்கு வரைபடங்களை உருவாக்குவதை விரும்புபவர். 

அவருடைய ஓவியங்கள் கனவு போல இருக்கும். அவரே கூறுவதைப் போல வஞ்சனை யாகவும் இருக்கும். மண்ணில் உருவங்கள் உருவாக்குவ தற்குப் படித்திருக்கிறார். 

காமிக்ஸ் எழுத கற்றிருக்கிறார். தனிப்பட்ட முறையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். நாய்களை நேசிக்கக் கூடியவர். தயக்கம் கொண்டவர் என்று தன்னைப் பற்றி அவர் கூறிக் கொள்பவர். அவர் பாதி சீனர். 

அவருடைய சீனப் பெயர் ஜாங் க்சியாவோ க்சியா. எளிதாக புன்னகைக்கக் கூடியவர். சிந்தனைத் திறன் மிக்கவர், வேடிக்கை யானவர். யாரோ ஒருவருடைய மகள், சகோதரி, தோழி அவர். உங்களுக்குத் தெரிந்த ஒருவராக அவர் இருக்கலாம்.

சேனலின் நினைவுகள் அவர் அனுபவித்த துயரங்கள் நிறைந்தவை யாக உள்ளன. அது வரையில் அவருக்கு அளிக்கப் படாமல் இருந்த நீதிமன்ற ஆவணங் களையும், சாட்சியங் களையும் படித்த பிறகு, தனது வலிகளில் இருந்து விடுபடுவதற் காக அந்தப் புத்தகத்தை எழுதினார்.

நிறைய இளம்பெண்கள் கடக்க வேண்டிய இருளைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்வதாக அவர் கூறுகிறார்.

''காலையில் எழுந்திருப்பதே மிகவும் கஷ்டமான விஷயமாக இருந்த மிகவும் துயரமான நாட்களை அனுபவித்தி ருக்கிறேன்,'' என்று 27 வயதான சேனல் கூறுகிறார். 
இளம்பெண்கள் கடக்க வேண்டிய இருள்


தான் வசிக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரில் பேட்டியளித்த அவர், ''முன்னேறிச் செல்வதற்கு ஒரு வழியையும் நினைத்துப் பார்க்க முடியாத பல நாட்கள் எனக்கு இருந்துள்ளன. அவை சோதனைக் காலங்கள்,'' என்றார்.

"அது கொடூரமானது. நான் எதுவும் வரைவ தில்லை, எதுவும் எழுதுவது இல்லை. நான் விரும்பிய தெல்லாம் தூக்கம் மட்டுமே. அப்போது தான் சிந்திக்காமல் இருக்கலாம். வாழ்வதற்கு அது வழிமுறை அல்ல."

"இது போன்ற காலத்தை மற்ற இளம் பெண்கள் கடக்க வேண்டி யுள்ளது பற்றி நான் சிந்தித்தேன். தாங்கள் விரும்பும் விஷயங்களில் இருந்து விலகிச் சொன்று, மனம் உடைந்து போய், நொறுங்கிப் போவார்கள். 

அப்படி நடக்க நாம் எப்படி அனுமதிக்க லாம் என்று சிந்தித்தேன்.'' தடை யில்லாமல், தெளிவாகப் பேசினார் அவர். ஆனால் உலகில் மற்ற பெண்களுக்கு இந்த அநீதி நடப்பது பற்றிய கோபம் தெரிந்தது. 

உணர்ச்சியால் குரல் அதிர்ந்தது. எமிலி டோவாக இருப்பது என்பதன் வலியை எண்ணற்ற வர்கள் அனுபவிக்கக் கூடாது.

"திறமையான இளம் பெண்கள் தங்கள் எதிர்காலம் பற்றி கனவுகளில் இருக்கிறார்கள். தாங்கள் செயலாற்று வதற்கு பல விஷயங்களை வைத்திருக் கிறார்கள். 

இது போல ஏதும் நடந்தால், வீட்டுக்குப் போய் அவமானத்தைத் தாங்கிக் கொண்டு, அதை வெளியில் சொல்லாமல் தங்களுக்குள் புதைத்துக் கொள்வார்கள்,'' என்கிறார் சேனல்.

"அறைக் குள்ளேயே கிடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறார்கள். 'ஒரு வேளை நான் பேசாமல் இருந்தால் இன்னும் நல்லதாக இருக்கும்' என்றும் நினைப்பார்கள்.

"இப்படி நடக்க அனுமதித்தால் மிகவும் துயரமானதாகி விடும். இந்த எதிர்மறை விஷயங்களை தங்களுக்குள் புதைத்துக் கொள்ள அனுமதிப்பது, அவர்களை தனிமைக்கு ஆளாக்குவது துயரமாகி விடும். 

மாறாக, இல்லை உனக்கு முழு வாழ்வுக்கான தகுதி உள்ளது, அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நாம் சொல்ல வேண்டும்.''

அந்த நேரத்தில் சேனல் பல்கலைக்கழக மாணவி கிடையாது. ஏற்கெனவே படித்து முடித்திருந்தார். அவருடைய தங்கை டிபானி வார இறுதியில் வீட்டுக்கு வந்திருந்தார். தன்னுடன் ஒரு விருந்துக்கு செல்ல விருப்பமா என்று அவர் கேட்டார்.

ஆனால் அவருடைய கதை அந்த உரையாடலை நீட்டித்துக் கொண்டு போனது. வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தது பற்றி நீண்டது. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் மாற்றத்தைக் காண அவர் விரும்பினார். 

குறிப்பாக, தடயவியல் பரிசோதனைகள் ஸ்டான்போர்டு மருத்துவ மனையில் நடைபெறுவ தில்லை. பாதிக்கப் பட்டவர்கள் 40 மைல்கள் பயணம் செய்ய வேண்டி யுள்ளது.

பாதிக்கப் பட்டவர் தரப்பு அறிக்கை என்று வெளியான சேனலின் கடிதத்தைப் படித்த பிறகு, நிறைய பெண்கள் துணிவு பெற்று தங்களைப் பற்றிய கதைகளை முதன் முறையாக வெளியில் சொல்ல முன்வந்தனர்.

ரெயின் (RAINN) - பாலியல் வன்கொடுமை, பாலியல் அத்துமீறல், சிறு வயதினருடன் பாலியல் அத்து மீறலுக்கான தேசிய நெட்வொர்க்,அமைப்பு அமெரிக்காவில் மிகப் பெரிய பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பாக உள்ளது.

அமெரிக்காவில் ஆறில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக் கான முயற்சிக்கு ஆளாகிறார் அல்லது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 

ஒவ்வொரு 92 விநாடிக்கும் அமெரிக்காவில் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிறார். 1000 பாலியல் தாக்குதல்களில், அதில் ஈடுபட்ட 995 பேர் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக் கிறார்கள்.

தினமும் எத்தனை பெண்களை கடந்து சொல்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள். ஆறில் ஒருவரை நினைத்துப் பாருங்கள். ''அந்தப் பெண் ஏன் முன்வர வில்லை? அந்தப் பெண் ஏன் புகார் செய்ய வில்லை என்று எப்போதும் நாம் கூறுவோம்,'' என்கிறார் சேனல்.

''ஏனெனில் அந்தப் பெண் புகார் கூறுவதற்கு சரியான ஏற்பாடு எதுவும் இல்லை. அவர் முன் வந்து கூறினால், அவர் மீது அக்கறை காட்டுவோம் என்று நம் மீது அவருக்கு எப்படி நம்பிக்கை வரும்? 

பாதிப்புக்கு ஆளாகி, உயிர் தப்பியவர் களுக்கு உதவி செய்வதற்கு நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும்.'' டர்னருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது, அந்த குற்றச் செயல் பாலியல் வன்புணர்வு குற்றமாகக் குறிப்பிடப் படவில்லை. 

ஆனால் சேனலின் வழக்கின் பின்விளைவாக கலிபோர்னியா வில் சட்டம் மாற்றப்பட்டு விட்டது. சுயநினைவு இல்லாத பெண்ணுடன் அல்லது போதையில் இருக்கும் பெண்ணுடன் வன்புணர்வு செய்தவருக்கு, 

குறைந்த பட்சம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்பது இப்போதைய சட்டமாக உள்ளது என்று சேனலின் வழக்கறிஞர் அலாலேஹ் கியானெரா விளக்குகிறார்.

எந்த வகையில் ஆண் உறுப்பை அந்தப் பெண்ணின் பாலியல் உறுப்புக்குள் செலுத்தினா லும் அது பாலியல் வன்புணர்வாகக் கருதப்படும் என்ற விளக்கம் தரும் வகையில் சட்ட திருத்தமும் செய்யப் பட்டுள்ளது.

டர்னருக்கான தண்டனை குறித்த நீதிமன்ற முடிவால் அவர் மிகவும் அதிர்ச்சியானார். பாதிப்பு அறிக்கையை வெளியிட வழக்கறிஞர் அனுமதி கேட்டபோது, ''அது உதவிகரமாக இருக்குமானால், நிச்சயமாக வெளியிடலாம்'' என்று கூறியிருக்கிறார். 

அது சமூக வலைத்தளம் அல்லது உள்ளூர் செய்தித்தாள் இணையதளம் வரை செல்லும் என்று நினைத்திருக் கிறார். ஆனால் இவ்வளவு தாக்கம் ஏற்படும் என்று ஒரு போதும் நினைக்க வில்லை.

அவருடைய அறிக்கை Buzzfeed-ல் முழுமையாக வெளியானது. நான்கு நாட்களில் 11 மில்லியன் முறைகள் அது பார்க்கப் பட்டது. உலகெங்கும் இருந்து சேனலுக்கு பல நூற்றுக் கணக்கில் கடிதங்களும் பரிசுகளும் அனுப்பப் பட்டன.

அவை அனைத்தையும் அவர் படித்தார். ''எனக்கு நானே கனிவாக எப்படி மாற்றிக் கொள்வது, அவர்களுக்கு நான் எப்படி யானவள் என்பதைக் கற்றுத் தருவதாக அவை இருந்தன. அவர்கள் மூலமாக என்னைப் பற்றி நான் அறிந்து கொண்டேன்'' என்று அவர் தெரிவித்தார்.
துணை அதிபர் ஜோ பிடன்


வெள்ளை மாளிகையில் இருந்தும் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. துணை அதிபர் ஜோ பிடன் அனுப்பிய கடிதத்தில், ''அந்தப் பெண்கள் போராடுவதற்குத் தேவையான பலத்தை நீங்கள் கொடுத்தி ருக்கிறீர்கள். 

எனவே நீங்கள் உயிர்களைக் காப்பாற்றி இருப்பதாக நான் நம்புகிறேன்,'' என்று கூறியுள்ளார். 

அவருடைய உண்மையான பெயர் வெளியிடப் படாத காரணத்தால், அவர் தான் எழுதினார் என்பது தெரியாமல், அவருடைய நண்பர்களே அவருக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். 

சேனல் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி யிருக்கிறார் என்பதை அவருக்கு சிகிச்சை அளிப்பவர் அறிந்திருக் கிறார். 

ஆனால் அவர் தான் எமிலி டோ என்பது பல மாதங்களாகத் தெரியாது என்பதால், ''ஸ்டான்போர்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை நீங்கள் படித்தீர்களா,'' என்று கேட்டிருக்கிறார்.

சேனல் மில்லர்

சேனலைப் போன்றவர்களின் வழக்குகளை நீதிமன்றங்கள் எப்போதும் விசாரித்துக் கொண்டிருக் கின்றன. பெயர்கள், இடங்கள், விவரங்கள் மட்டுமே மாறியிருக்கும். 

எனவே இவ்வளவு பரவலாகப் பரவுவதற்கு, அவருடைய கதை, அவருடைய வலி குறித்த விவரங்களில் என்ன விஷயங்கள் இருந்தன?

''இருண்ட காலம் குறித்து வருந்தி ஒதுங்கி விடாமல் இருக்கலாம்,'' என்று சேனல் கூறுகிறார். ''உங்களுடைய இருண்ட காலத்தை சிலர் ஏற்றுக் கொள்ளும் போது பெரிய நிவாரணம் கிடைத்தது போல இருப்பதாக நான் நினைக்கிறேன். 

ஏனெனில் இது அசிங்கமான, மறைக்க விரும்பிய விஷயமாக நீங்கள் நினைத்திருந்தீர்கள்'' என்றும் அவர் கூறினார். ''நீங்கள் அதைக் காட்டினால், மக்கள் கெஞ்சி பின் வாங்குவார்கள். இந்த கஷ்டமான உணர்வுகள் அனைத்தையும் என்னால் வெளிப்படுத்த முடியும். 

அவை பற்றி வெளிப்படை யாகப் பேச முடியும். அந்தத் துயரத்தை அனுபவித்த தற்காக அவமானப் படாமல், வெளியில் கூறுவேன்,'' என்கிறார் அவர்.

நீதிமன்ற நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில், அது பற்றி மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது, அது எப்படிப் பட்டது என மற்றவர்க ளுக்குக் காட்ட வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்று நினைப்பதாக சேனல் கூறினார்.

`என்னைப் பொருத்த வரை சொல்லக் கூடிய,சொல்ல முடியாத ஆதாயங்கள் பல உள்ளதை அறிவேன். பாலியல் வன்புணர்வு சோதனைகள் நடத்தப்பட்டன. 

பாதிக்கப் பட்டவருக்குக் கிடைக்க வேண்டிய அளவில் காவல் துறையினர் மற்றும் செவிலியர்களின் உதவி, வழக்கறிஞர், வழக்கு தொடுப்பவர் உதவிகள் கிடைத்தன.''

''இப்போதும்கூட அதை நினைத்தால் மன ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது, அதிக துயரமாக இருக்கிறது. நன்கு மனோதிடமாக இருப்பவருக்கே இந்த நிலைமை என்றால், வேறு பெண்களுக்கு எந்த அளவுக்கு நரக வேதனையாக இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன்.''

''ஜன்னல்கள் இல்லாத நீதிமன்ற அறையின் சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது எப்படி இருக்கும், 

உள்ளே எப்படி இருக்கும், அங்கே அரங்கில் அமர்ந்திருப்பதும், அர்த்தமற்ற விசாரணை களை எதிர் கொள்வதும் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுத வேண்டியது என்னுடைய கடமை என்று நான் நினைத்தேன்.''

புத்தகம் எழுதிய காரணத்தால் அவருக்கு வழங்கப் படாமல் இருந்த நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் படிவங்களை அவரால் பார்க்க முடிந்தது.

நீதிமன்றம் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும், நண்பர்களும் பார்த்தவை மற்றும் கேட்ட வற்றை அறிந்த போது மிகுந்த வலியாக உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

''அது மிகவும் சிரமமாக இருந்தது. நீண்ட காலமாக நான் விட்டு விட்டேன். கடைசியில், நல்லது, நான் அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.''

''புரோக் மற்றும் அந்தத் தரப்பு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு காட்சியாகப் பேசியவற்றை, என் கீழ் உள்ளாடையை அகற்றியது, அவனுடைய விரலை வைத்தது... எ

ன படித்தேன்,'' என்று கூறிய அவர் சற்று நிறுத்தி விட்டு தொடர்ந்தார். ''வார்த்தைக ளால் மறுபடியும் நான் நிர்வாணப் படுத்தப் பட்டதைப் படித்தபோது , மூச்சை நிறுத்தச் செய்வது போல இருந்தது'' என்று கூறினார்.

''எல்லோரும் கவனித்துக் கொண்டு, எதுவும் செய்யாமல் இருந்த நீதிமன்ற அரங்கில் இவை அனைத்தும் நடந்தன. என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.'' 2017ல் புத்தகத்தை எழுதத் தொடங்கிய சேனல், தன்னுடைய பெயரை வெளிப்படுத்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் முடிவு செய்தார்.

ரகசியம் காப்பது என்ற சுமை தனக்கு அதிக பாரத்தை ஏற்படுத்தி விட்டது என்று அவர் கூறினார். தன்னை அறிந்தவர்களில் 90 சதவீதம் பேருக்கு, தன்னுடைய இன்னொரு அடையாளம் பற்றித் தெரியாது என்கிறார்.

அது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ''தானே ஏற்படுத்திக் கொண்ட மன அழுத்தமாக'' இருந்தது. ஆனால் ''இந்தக் கையெழுத்துப் படிவங்களில் உள்ள எல்லா விஷயங்களும் என் கைகளுக்கு வந்து விட்டன என்பது நல்ல தருணமாக இருக்கிறது. 

நான் அவற்றை எடுத்துப் பார்த்து, கீழேபோட முடியும். ஆனால் நான் அவற்றை வைத்திருக் கிறேன். நான் விரும்பிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்த, அவற்றில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும்."'

''நடந்தவற்றை மீண்டும் விவரித்துக் கூறுவதற்கு நிறைய பலம் தேவை,'' என்று அவர் குறிப்பிட்டார். 'என் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற புத்தகம் சேனல் அனுபவித்த மன அழுத்தங்கள் பற்றியதாக உள்ளது. 

என்ன நடந்தது என்பதை அறியாமல் எழுந்ததில் இருந்து, என்ன தாக்குதல் நடந்தது என்பதை செய்திகள் மூலமாகப் படித்து தெரிந்து கொண்டது வரையில், கடைசியில் தன் பெற்றோர்களிடம் கூறியது, 

நீதிமன்ற அரங்கில் மனம் உடைந்து அழுதது வரை எல்லாமே அதில் உள்ளன. ''எழுதுவதன் மூலம் உலகை நான் ஆய்வு செய்திருக்கிறேன்'' என்றார் அவர்.

அவர் இன்னமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலைக்குச் செல்வதாகத் தான் நண்பர்கள் நினைத்துக் கொண்டிருந் தார்கள். எனவே அவருடைய முன்னாள் சகாக்கள் தகவல் குறிப்புகளை வழங்கி யுள்ளனர்.

''ஆரம்பத்தில் அவற்றை சொந்தமாக பாதுகாப்பது மற்றும் ஆய்வு செய்வது ஆகியவை முக்கிய மானதாக இருந்தது,'' என்று குறிப்பிட்டார்.

சேனல் என்ற பெயருடன் 'வெளிக்காட்டிக் கொள்வது என்று ஆரம்பத்தில், முடிவு எடுத்த போது அது ''புயலாக'' அமையும் என்று எதிர் பார்த்தார். கடைசியில், அமைதி மற்றும் பலமான தருணமாக அது அமைந்தது.

'கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அது எனக்கு மிகவும் அமைதியான நாளாக அமைந்திருந்தது'' என்றார் அவர். 'இதன் மறுபக்கத்தில் இருந்து வெளியே வந்து விட்டதாக திடீரென நான் உணர்ந்தேன்.''
சேனல் மில்லர்


குற்றச் சாட்டுகள் அனைத்தையும் மறுத்த டர்னர் தான் செய்தவற்றை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் என்று சேனல் நினைக்க வில்லை. ''தண்டனை விதித்த போது அவன் மன்னிப்பு கோரும் 10 வரிகளை படித்தான்,'' என்று கூறிய அவர்,''அவை எனக்கு வழக்க மானவையாகத் தோன்றின'' என்கிரார்.

மன்னிப்பு கோரும் 10 வரிகளை நீதிமன்ற விசாரணையில் நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை உண்மையில் அது எனக்குள் ஏற்படுத்தியது. 

ஏனெனில் அவன் கற்றுக் கொள்ளாமல் போனால், என்ன பயன் இருக்கப் போகிறது? அவன் தன்னை மாற்றிக் கொண்டிருந்தால், தண்டனை குறித்து அவனை நான் மன்னித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.''

மன்னிப்பு கோரும் 10 வரிகளைசுய வளர்ச்சியில் நான் உண்மையான அக்கறை கொண்டிருந்தேன். 

அதில் இருந்து அவன் ரொம்ப விலகி விட்டான் சுய பரிசோதனை செய்யுமாறு எந்த வகையிலும் அவன் நிர்பந்திக்கப் படவி்லை அல்லது அது என்னை எப்படி பாதித்தது என்பதை உணரச் செய்ய வில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்ட போது உண்மையில் எனக்கு வருத்தமாக இருந்தது.''

தன்னுடைய கதையை வெளிப்படையாகக் கூற முன் வந்த சேனல் மில்லரின் துணிவை நாங்கள் பாராட்டுகிறோம். ஸ்டான்போர்டு வளாகத்தில் அவர் பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு ஆளானார் என்பதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு பல்கலைக் கழகம் என்ற வகையில், பாலியல் வன்முறையைத் தடுக்கவும், அதுகுறித்த புகார்களை சிறப்பாக விசாரிக்கவும், நமது சமூகத்தில் இருந்து முற்றாக அதை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் எங்கள் முயற்சிகளை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறோம்.

பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு ஆளானவர் களுக்குப் பரிசோதனை செய்வதற்கு அருகாமையில் உள்ள இடம் சான் ஜோஸ்-ல் உள்ள வேலி மெடிக்கல் சென்டர்தான். இன்னும் அருகில் ஒரு பரிசோதனை நிலையம் தேவை என்பதை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்தோம்.

ஸ்டான்போர்டு மருத்துவ மனையிலேயே அதற்கான இடவசதியை அளிக்க உறுதி எடுத்துக் கொண்டிருக் கிறோம். சார்ட் என்ற இந்தப் பரிசோதனை வசதியை அளிக்கும் சாண்டா கிளாரா கவுண்டி, அதற்குத் தேவையான செவிலியர் களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

நீதிபதி ஆரோன் பெர்ஸ்கியின் தீர்ப்பு பற்றிய பெரும்பாலான விமர்சனங்கள், டர்னருக்கு தண்டனை விதிப்பதில் விட்டுக் கொடுத்து விட்டார் என்ற வகையில் உள்ளன. 

பணக்கார பின்னணி உள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்கள் அமெரிக்க நீதித் துறை விசாரணையில் அதிக கனிவுடன் நடத்தப் படுகிறார்களா என்று தேசிய அளவில் விவாதங்கள் உருவாயின.

''சிறப்பு உரிமை என்பது தன்னால் மற்றவர்கள் மீது ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்வதில் தன்னுடைய செயல் பாடுகளால் மதிப்பிடப் படுவதாக இருக்கக் கூடாது'' என்று சேனல் கூறுகிறார். 

''கஞ்சா வைத்திருந்தார் என்ற வன்முறை அல்லாத புகார்களில் சிக்கிய கருப்பர் இனத்தவர் களுக்கு அதிக காலம் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது தெரியுமா. அது கேலிக்குரியதாக உள்ளது.''

''நீங்கள் செய்யும் செயல்களை பிறரைக் காயப் படுத்தாதைப் போல, உங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாததைப் போல எப்படி நகர்ந்துசெல்ல முடியும்?''

''இது நடப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட நபரும் நன்றாகக வாழ்ந்து கொண்டிருந்தார் என்ற கருத்தை ஒருபோதும் பரிசீலிப்ப தில்லை என்பது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.''

''நாம் நமக்கான லட்சியங்களை, செயல் திட்டங்களை வைத்திருக் கிறோம். இது நடக்கும் போது அவை முற்றிலுமாக தூக்கி வீசப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. 

அந்தப் பெண் ஏன் புகார் செய்யவில்லை என்று மக்கள் கேட்கும் போது, அவர் ஏன் எல்லா வற்றையும் நிறுத்தி விட்டு, ஒரு போதும் விரும்பியிராத இடத்துக்குச் செல்லவில்லை என்று சாதாரண மாகக் கேட்பதைப் போல இருந்தது.''

தன்னுடைய தண்டனையை ரத்து செய்வதற்கு கடந்த ஆண்டு டர்னர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் மேல் முறையீடு நிராகரிக்கப் பட்டது. பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவருடைய பெயர் நீடிக்கிறது. 

பல்கலைக் கழகத்திற்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஒஹாயோவில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அந்தப் புத்தகத்தை டர்னரும், அவருடைய குடும்பத்தினரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, ''அவர்கள் படிக்க விரும்பினால், உண்மையில் அதில் உள்ள வற்றைக் கேட்க விரும்பினால், எப்போதும் அதை நான் ஊக்குவிப்பேன். 

கற்றலையும், ஆழமாகப் புரிந்து கொள்வதையும் எப்போதும் நான் ஊக்கு விப்பேன்,'' என்று சேனல் பதில் அளித்தார்.

''ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது என் கட்டுப்பாட்டை மீறிய விஷயம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். எப்படி முன்னேறிச் செல்வது என்பதில், 

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் தான் நான் கவனம் செலுத்த முடியும். முக்கியமாக இந்தப் புத்தகம் ஒரு துணையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.''

''உங்களுடன் வைத்திருக்க வேண்டிய புத்தகம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக நினைக்கும் போது, இரவில் படுக்கையில் படிக்க வேண்டிய அல்லது கஷ்டமான நேரத்தில் கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம் என்று நினைக்கிறேன். 

இது போன்ற சூழ்நிலையில் நான் இருந்த போது, எதைக் கேட்க நான் விரும்பி யிருப்பேன் என்று எப்போதும் நான் நினைத்துப் பார்ப்பேன்.''

தன்னுடைய இருண்ட காலத்தில் தனது ஓவியங்கள் தனக்கு ஆறுதலை வழங்கியதாக சேனல் கூறுகிறார். வியட்நாமில் அவர் எடுத்த புகைப் படத்தின் மீது ஓவியம் வரை ந்திருக்கிறார்
பாலியல் வல்லுறவு


தன் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல் நடந்தபோது அந்த வழியே சைக்கிளில் சென்ற ஸ்வீடன் மாணவர்கள் பீட்டர் ஜான்சன், கார் பிரெட்ரிக் அம்டிட் ஆகியோர் அதைத் தடுத்துள்ளனர். அவர்களுக்கு தன் மனதில் அவர் இடம் கொடுத்தி ருக்கிறார்.

அந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு மோட்டார் சைக்கிள்களின் படத்தை அவர் வரைந்து படுக்கைக்கு மேலே வைத்துக் கொண்டு தூங்குகிறார். நம்பிக்கை தருவது போல அது இருப்பதாக அவர் நினைக்கிறார்.

"எனக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால், மக்கள் இப்போது முன் வந்து சரியான விஷயத்துக் காக உண்மையில் போராடத் தயாராக இருக்கிறார்கள் என்று காட்டுகிறது என்று நினைக்கிறேன். அது நல்ல ஊக்கம் தருவதாக இருக்கிறது.''

இப்போது புத்தகம் வெளியாகி விட்டது. தன் வாழ்வின் அடுத்த கட்டத்தில் என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கான திட்டமிடலில் சேனல் மில்லர் இருக்கிறார்.

இப்போது என்ன செய்ய திட்ட மிடுகிறீர்கள் என கேட்டதற்கு, "குழந்தை களுக்காகப் புத்தகங்கள் எழுத விரும்புகிறேன். அவர்களுடைய வளரும் மூளை களுக்கும், கனிவான இதயங்க ளுக்கும், இருண்ட நாள்கள் பற்றியும், 

கெட்ட விஷயங்கள் பற்றியும் இன்னும் அறிந்திராத அவர்களுக் காக எழுத விரும்புகிறேன். சில ஆண்டுகள் எனக்கு கரடுமுரடாக இருந்தன. ஆனால் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.

எப்போதும் என் வாழ்வின் தொடக்கமாக இருப்பதாக உணர்கிறேன்,'' என்று அவர் கூறினார்.


கதை சொல்லும் பெண்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)