வயாகரா மாத்திரை பற்றி நிறைய உண்மைகளும், கட்டுக் கதைகளும் (Myths) இருக்கின்றன.அவை பற்றி கூறுவதற்கு முன்னால், இந்த மாத்திரையின் பெயர்க் காரணம் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். 
வயாகரா மாத்திரைவயாகரா என்பது ஒரு பிராண்டின் பெயர். Sildenafil Citrate என்பது இதனுடைய கெமிக்கல் பெயராகும். ஆணுறுப்புக்குப் போகின்ற ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது தான் இந்த மாத்திரை யினுடைய முக்கிய வேலையாகும். 

ஒருசில ஆண்களுக்கு ஆணுறுப்பு விறைப்புத் தன்மை பிரச்னை இருக்கும். இதற்கு மருத்துவரீதியாகப் பல காரணங்கள் உள்ளன.

ஒருத்தருக்கு என்ன காரணத்தால் விறைப்புத் தன்மை பிரச்னை உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற வாறு, டோஸேஜை சரிப்படுத்தி கொடுக்கலாம் பாலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஷா துபேஷ் சந்தேகங் களுக்கு பதிலளிக்கிறார்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொண்டால் என்ன நேரும்?

பார்மசியில் இருப்பவர் களுக்கு வயாகராவைப் பற்றிய முழுமையான தெளிவு இருக்கும் என்று சொல்ல முடியாது.

இதனால் யாருக்கு எவ்வளவு டோஸேஜ் கொடுப்பது என்பது தெரியாமல், அவர்களே 50 மில்லி கிராம், 100 மில்லி கிராம் என வீரியம் அதிகம் உள்ள High Dosage கொடுத்து விடுகின்றனர். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. அதிலும் இதய நோய் உள்ள ஒரு சில வயதான ஆண்கள் ஹை டோஸேஜ் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்ளும்போது, மாரடைப்பு வருவதற்கு சாத்தியம் பல மடங்கு அதிகம்.

இது மாதிரியான பக்க விளைவு களைத் தடுப்பதற்கு மருத்துவர் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் வயாகராவை எடுத்துக் கொள்வது நல்லது இல்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளின் முடிவின்படி, இந்த மாத்திரையை அன்றாடம் எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்வது ஆபத்தானது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. 

ஒரு சில ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளைத் தொடர்ச்சி யாகவும் உட்கொள் வார்கள். இதனால், நிறைய பிரச்னைகள் ஏற்படும். 
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொண்டால்
எனவே, தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் நாளில் மட்டும் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரம்பிக்கிற டோஸ் 25 மில்லி கிராம்தான் இருக்க வேண்டும். அதுவும் என்ன மாதிரியான பிரச்னை தங்களுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகே வயாகராவைப் பயன்படுத்த வேண்டும்.

சில ஆண்கள் விறைப்புத் தன்மை குறைபாடு இல்லாத போதும், தாம்பத்யத்தில் ஈடுபடுகிற நேரங்களில் எல்லாம் வயாகராவை எடுத்துக் கொள்ளும் வழக்கம் கொண்டிருப் பார்கள். 

இதனால் வயாகராவுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படும். நாளடைவில் மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் உறவில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
தலையை இரண்டாகப் பிளக்கிற மாதிரி வலி ஏற்படுவது, முதுகு வலிக்கு ஆளாவது, கண் பார்வையில் குறைபாடு, சிலருக்குக் கண்கள் நீல நிறமாகத் தெரிதல் போன்ற பாதிப்புகள் நாளடைவில் வரும். விறைப்புத் தன்மை நீண்ட நேரம் நீடிக்கும் போது ஆணுறுப்பு சதைகள் உயிர்ப்புத் தன்மையை இழக்கும். ரத்த ஓட்டத்தை திருப்பி உள்ளே அனுப்ப முடியாது. 

இது போன்ற சிக்கல் உண்டாகும் போது ஆணுறுப்பின் பக்கவாட்டில் ஊசியைக் குத்தி, அதிகப் படியான ரத்தத்தை வெளியேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுவார்கள். 
எனவே, மருத்துவரின் பரிந்துரை இல்லாமலோ அல்லது மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு மேலாகவோ உட்கொள்ளக் கூடாது. எனவே, ஆண்கள் வயாகரா விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

வயாகராவை பெண்கள் பயன்படுத்தலாமா?

வயாகரா பற்றி இருக்கும் பல தவறான நம்பிக்கை களில் இதுவும் ஒன்று. வயாகரா ஆண்களுக்கு மட்டுமே உரித்தான மாத்திரை அல்ல. 

ஆண், பெண் என இரண்டு பாலினத்தினரும் இதை பயன்படுத்த லாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மாதவிடாய் நாட்களில், டாக்டரின் பரிந்துரைப்படி வயாகராவை உட்கொள்ளலாம். 
எப்படி பயன்படுத்த வேண்டும்?
கருவுற்ற பெண்கள் இந்த மாத்திரையை மகப்பேறு மருத்துவரின், அறிவுரைப்படி சாப்பிட்டு வரலாம். அவ்வாறு செய்வதன் மூலம் பலவீனமாக உள்ள குழந்தையின் (சவலைக் குழந்தை) உடல் எடை கணிசமாக அதிகரிக்கும் என கண்டறியப் பட்டுள்ளது.
மேலும் பெண்களுக்குப் பாலியல் பிரச்னைகளை நிவர்த்தி செய்யக் கூடிய மாத்திரைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த FDA(Federal Drug Administration) அமைப்பு கூறுகிறது. 

அதே வேளையில் ஹார்மோன் களை ஒழுங்கு படுத்துதல், ஈஸ்ட்ரோஜன் க்ரீம் எனப் பல சிகிச்சை முறைகள் பெண்களுக்கு உள்ளன. இதை முறைப்படி பாலியல் சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன் பெறலாம்.வயாகரா பயன்படுத்த விரும்புகிறவர் களுக்கான ஆலோசனை என்ன?

உரிய அனுமதி இல்லாமல், உலகினில் திருட்டுத் தனமாக விற்கப்படும் போதை மருந்துகளில் ஒன்றாக வயாகரா மாறி விட்டது.

மருத்துவ வல்லுனர் கூற்றுப்படி கலப்படம் இல்லாத, உண்மையான வயாகரா மாத்திரையை பெறுவது கடினம் என்பது தான் இன்றைய நிதர்சனம். மருத்துவரின் பரிந்துரை அவசியம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதன் காரணம் இது தான். 
புகையிலை முதலான போதைப் பொருட்களை 18 வயதுக்கு உட்பட்டவருக்கு விற்பனை செய்வது குற்றமாகக் கருதப் படுகிறதோ, அது போல் இந்த மாத்திரையை யும் 18 வயது நிரம்பாத நபருக்கு விற்பனை செய்வதும் குற்றம் என எழுதப்படாத விதி இருக்கிறது.