கோவாவில் நிர்வாண பார்ட்டி போஸ்டர் - போலீசார் அதிர்ச்சி !

0
நிர்வாண பார்ட்டி போஸ்டர் ஒட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் 
போஸ்டர் ஒட்டிய இளைஞர்



இதில் 10-15 வெளிநாட்டு பெண்களும் பத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது. 
உண்ணும் உணவு ஜீரணமாக? வீட்டிலேயே மருந்து !
எங்கு எப்போது நடக்க இருக்கிறது என்கிற விவரம் அதில் இடம் பெறவில்லை. இந்த பார்ட்டி போஸ்டர், சமூக வலை தளங்களில் வைரலானது.

இதை யடுத்து கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரதிமா கோட்டின்ஹோ, முதலமைச்சர் பிரமோத் சாவந்தும் சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகரும் இது போன்ற நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
துபாயில் 43 வருடம் விடுப்பு எடுக்காத போலீஸ் அதிகாரி !
உஷாரான போலீசார், தங்கள் சோதனையை தீவிரப் படுத்தினர். ’கோவாவில் எந்த நிர்வாண பார்ட்டியையும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர்கள் தெரிவித் திருந்தனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு நிர்வாண போஸ்டர் ஒட்டியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் போலீசிடம் கூறும் போது, ‘’கல்லூரி படிப்பை பாதியிலேயே முடித்து விட்டேன். 
நிர்வாண பார்ட்டி போஸ்டர்



பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம் என்று யோசித்தேன். அதற்காக இணைய தளத்தில் இருந்து சில புகைப் படங்களை எடுத்து போஸ்டரை தயாரித்து ஒட்டினேன். 
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
இதற்கு முன்பணம் பெற முடிவு செய்திருந்தேன். அதன் மூலம் சபலம் கொண்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பணத்தை சுருட்டி விட வேண்டும் என்பதுதான் என் திட்டம்.

ஆனால் நான் எதிர் பார்த்ததற்கு அதிகமாகவே போன் அழைப்புகள் வந்து விட்டது. வெளிநாட்டில் இருந்தும் அழைப்புகள் வந்தது. இவ்வளவு அழைப்புகள் வரும் என்று எதிர் பார்க்க வில்லை. 

இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. போனை அணைத்து விட்டேன். ஆன் செய்த பிறகு போலீசாரால் கைது செய்யப் பட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

நிர்வாண போஸ்டர் மூலம் ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற அந்த இளைஞரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)