வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி !

0
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி !
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் அங்குள்ள வாகனங்கள் அனைத்தும் அடித்து செல்லப் பட்டன. ஜப்பானில் புகழ்பெற்ற புல்லட் ரயில்கள் மழைநீரால் உருவான சகதியில் சிக்கியுள்ளது. 

சுழன்றடித்த சூறாவளியால் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த பேய் மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுலுமாக முடங்கியுள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சுமார் 14 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. 

மேலும் அந்தநாட்டில் உள்ள 3 லட்சத்து 36 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந் துள்ளனர். 
வெள்ளத்தில் சிக்கி யுள்ளவர்களை படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. 

இது வரையில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)