ரூ 7,00,00,000-க்கு விலை போன கார் பார்க்கிங் - அதிர்ச்சியில் தொழிலதிபர் !

0
பிரபல தொழிலதிபர் தனக்குச் சொந்தமான வாகன நிறுத்தும் இடத்தினை ரூ. 7 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் வீடு, நிலம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. 
கார் பார்க்கிங்


அதன் விளைவு தான் ஹாங்காங்கில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத சம்பவம் அரங்கேறி யுள்ளது. 

தொழிலதிபர் ஜானி சியுங் ஷுன் யீ (Johnny Cheung Shun-yee) தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இடத்தினை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளார்.

ஹாங்காங்கில் மிக விலை உயர்ந்த 79 அடுக்குமாடிக் கட்டடமான தீ சென்ட்ரல் கோபுரத்திற்கு நேராக வாகன நிறுத்துமிடம் அமைந்துள்ள காரணத்தி னாலே அதிக விலைக்கு விற்பனையாகி யுள்ளது. 


ஜானி ஏற்கனவே அதே பகுதியில் மூன்று காலி இடங்களை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. 

ஜானி விற்பனை செய்துள்ள இடத்தில் நிற்கப் போகும் வாகனத்தின் உரிமையாளர் தான் உலகிலேயே அதிக விலையான இடத்தில் பார்க்கிங் செய்யப் பட்டுள்ளது என்பதில் பெருமை கொள்வார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)