லலிதா ஜூவல்லரி கொள்ளை - மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல் !

0
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளில் மேலும் 6 கிலோ நகை மீட்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லலிதா ஜூவல்லரி கொள்ளை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் அக்டோபா் 2 ஆம் தேதி ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். 

இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து மா்ம நபா்களை தேடி வந்தனா். இதை யடுத்து அக்டோபா் 3 ஆம் தேதி திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை பிடித்து விசாரித்தபோது ஒருவா் தப்பிச் சென்று விட்டார். 

மற்றொருவரை பிடித்து போலீஸார் விசாரித்த போது, திருச்சி நகைக் கடையில் திருடியவா்கள் என்று தெரிந்தது. 
இதில், பிடிபட்டவா் திருவாரூா் மாவட்டம் மடப்புரத்தைச் சோந்த மணிகண்டன் என்றும் தப்பி யோடியவா் சுரேஷ் என்றும் தெரிய வந்தது. இதை யடுத்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனா்.

அதைத் தொடா்ந்து சுமார் 10 க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய விசாரணையில் தப்பி யோடிய சுரேஷ் மற்றும் அவரது உறவினா் முருகன் ஆகிய இருவரும் தான் திருட்டு சம்பவத்தில் முக்கியமான வா்கள் என தெரிய வந்தது. 

இதில் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன்தான் சுரேஷ் என்பது தெரிந்தது. இதை யடுத்து கனக வல்லியையும் போலீஸார் கைது செய்தனா். இதை யடுத்து திருவண்ணாமலை அருகேயுள்ள செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். 

தொடா்ந்து இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகனை தனிப்படை போலீஸார் தேடிவந்த நிலையில், முருகன் பெங்களூரில் உள்ள 11 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகம்மா முன்பு சரணடைந்தான்.

முருகன் மீது ஏற்கெனவே பெங்களூருவில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அங்கு கொள்ளை யடிக்கப்பட்ட நகைகள் தொடர்பாக 

முருகனிடம் அம்மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, திருச்சி மற்றும் பெரம்பலூரில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்ப தாக முருகன் கொடுத்த தகவலை அடுத்து, 
முருகனை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்த கர்நாடக போலீஸார், திருச்சி மற்றும் பெரம்பலூரில் முருகன் சொன்ன இடங்களில் எல்லாம் சோதனை நடத்தி நகைகளை பறிமுதல் செய்து கொண்டு பெங்களூரு புறப்பட்டனர் போலீஸார். 

தகவல் அறிந்த திருச்சி போலீஸார் தகவல் அளித்தனர். அவர்கள் தகவலின் பேரில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடக போலீஸாரின் காரை, வாலி கண்டபுரம் என்ற இடத்தில் வைத்து துரத்திச் சென்று மறித்த பெரம்பலூர் போலீஸார், 

பறிமுதல் செய்த நகைகள் மற்றும் முருகனோடு, கர்நாடக போலீஸாரை, எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது, அந்த நகைகள் போட்டதில் 11 கிலோ இருந்ததுடன் அந்த லலிதா ஜூவல்லரியில் கொள்ளை யடிக்கப் பட்டவை என்பது உறுதிப் படுத்தப் பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொள்ளையன் முருகனை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று, தமிழக மற்றும் பெங்களூரு போலீஸார் விசாரணை நடத்தி வந்ததனர்.


இந்நிலையில், கொள்ளையன் முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரை வாடிப் பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரிட மிருந்து 6 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த கணேசனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் இது வரை 22.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings