திருப்பூரில் பாலத்தில் இருந்து பஸ் மீது குதித்த வாலிபர் !

0
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் மேம்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இந்த மேம் பாலத்தின் மேல் நடந்து சென்று கொண்டிருந்தார்.




திடீரென்று அந்த வாலிபர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நின்று கம்பியை பிடித்தபடி கீழே குதிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அந்த வாலிபரை கீழே குதிக்க வேண்டாம் என்று சத்தம் போட்டனர். ஆனால் வாலிபர் பல்லடம் சாலையை நோக்கி வந்த அரசு பஸ்சின் மீது குதித்தார். 

இதை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் வாலிபர் பஸ்சின் மேற்பரப்பில் இருந்து உருண்டு கீழே விழுந்தார். இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
குறைந்த விலை வீட்டின் மவுசு !
நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி காட்சி !
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு தெற்கு போலீசில் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணை யில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 27) என்பது தெரிய வந்தது. 

மேலும் இவர் சில காலம் டிரைவராக பணி யாற்றியதும், மனநிலை பாதித்தும் காணப் பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது.




பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மூலம் அவரது உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டு அவர்களுடன் அந்த வாலிபரை அனுப்பி வைத்தனர்.
மேம்பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் வாலிபரின் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings