ஐ.நா.,வில் சீறிய சிறுமி... எவ்வளவு தைரியம்?

0
ஐ.நா., தலைமைய கத்தில் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட, பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்டா (16) உலக தலைவர் களிடம் சராமரியாக கேள்விகளை முன் வைத்தார்.
ஐ.நா.,வில் சீறிய சிறுமி... எவ்வளவு தைரியம்?
ஐ.நா., சபையின் 74வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் இன்று(செப்.,24) முதல் செப்., 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில் ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியா குட்டரெஸ் ஏற்பாட்டில், நேற்று (செப்.,23) நடந்த பருவநிலை நடவடிக்கை மாநாட்டில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 
இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்(16), கலந்து கொண்டு பேசினார். 

இவர், காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங் களுக்கு அடித்தளமாக இருப்பவர்.
ஐ.நா.,வில் சீறிய சிறுமி... எவ்வளவு தைரியம்?
ஐ.நா.,வில் கிரேட்டா பேசியதாவது: நான் இங்கே இருக்கக் கூடாது. பள்ளியில் படித்து கொண்டிருக்க வேண்டும். எனது கனவு, குழந்தை பருவத்தினை நீங்கள் (உலக தலைவர்கள்), வெற்று வார்த்தைக ளால் திருடி விட்டீர்கள். 
நாம் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகு பற்றி பேசிக்கொண்டி ருக்கிறீர்கள்.

வளி மண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர் கொள்வதில், இளைய தலைமுறையை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். சுற்றுச் சூழல் சீர்கெட்டுக் கொண்டிருக் கிறது. 
ஐ.நா.,வில் சீறிய சிறுமி... எவ்வளவு தைரியம்?
மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கி றார்கள். ஆனால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இளைய தலைமுறை யிடம் நம்பிக்கையை எதிர் பார்க்கும் உங்களுக்கு எவ்வளவு தைரியம்.
பருவநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க நீங்கள் உண்மையாக முயற்சி எடுக்கா விட்டால், நீங்கள் அரக்கர்கள் தான். இளைய தலைமுறை உங்களை கவனித்து வருகிறது. 

எங்களை தோல்வியடைய செய்ய நினைத்தால், நாங்கள் உங்களை என்றும் மன்னிக்க மாட்டோம். இவ்வாறு அவர் உலக தலைவர்க ளிடம் கேள்விகளை முன் வைத்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)