பணத்தை சாலையில் வீசி வீடியோ வெளியிட்ட வாலிபர் !

0
சமூக வலை தளங்களில் வாலிபர்கள் வித்தியாச மான செயல்களை செய்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவது இப்போது டிரெண்டாகி விட்டது. 
பணத்தை சாலையில் வீசிய வாலிபர்


அன்றாடம் ஏதேனும் புதிய செயல்களால் மக்களை ஈர்க்க வேண்டும் என நினைத்து பலரும் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றனர்.

அப்படியொரு வாலிபர், துபாயில் சாலை ஒன்றில் நிறுத்தப்பட்ட காரின் அருகே நின்றுக் கொண்டு துபாய் பணத்தை வீசி வீடியோவினை எடுத்துள்ளார்.

பின்னர் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட் டுள்ளார்.
இதற்காக அந்த நபர் துபாய் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இயக்குனர் பைசல் அல் காசிம் கூறுகையில், ‘துபாய் பணத்தை சாலையில் வீசிய நபரின் வீடியோ குறித்த தகவல் கிடைத்தவுடன் அவரை தேடினோம்.


கண்டு பிடிக்கப் பட்டவுடன் கைது செய்து விட்டோம். பணத்தை வீச காரணம் என்ன? என அவரிடம் விசாரித்த போது,

தன்னை அதிக பேர் சமூக வலைத் தளத்தில் பின் தொடர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டார்.

துபாய் நாட்டின் சைபர் கிரைம் விதிப்படி, நாட்டின் பெருமையை சீர் குலைக்கும் வகையில் வீடியோ வெளி யிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும், அச்சட்டத்தின்படி, குற்றவாளிக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்’ என கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)