கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !

கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !

0
இவ்வளவு நேரத்துக்கு கம்மியா கழுவுனா ஆபத்து தான். கையை கழுவ வேண்டும் என்பது நம்முடைய அடிப்படை சுகாதாரக் கடமைகளில் ஒன்றாகும்.
கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !
ஏனெனில் கை கழுவுவது நமது ஆரோக்கி யத்தை பாதுகாப்பதன் முதல் படியாகும். நம்மை பாதிப்புக்கு உள்ளாக்கும் பல நோய்களை முறையாக கையை கழுவுவதன் மூலமே தடுத்து விடலாம்.

நமது உடலுக்குள் கிருமிகள் செல்வதைத் தடுத்து நோயில் விழுவதை 30 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. 

கை கழுவுவது என்பது வெறுமனே கையை தண்ணீரில் மூழ்கி எடுத்து விடுவது அல்ல, அதனை முறையாக செய்தால் மட்டுமே அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க முடியும். 

இந்த பதிவில் கை கழுவுவதற் கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி வாய்ந்ததாக இருந்தால் உங்கள் உடல் பல கிருமிகளை தானாக எதிர்த்து போராடும். 

இந்த உலகில் பில்லியன் கணக்கில் கிருமிகள் உள்ளது, ஆனால் அவை அனைத்தும் நோய்களை ஏற்படுத்து கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
நமது நோயெதிர்ப்பு மண்டலம் பல கிருமிகளை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

நம் குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா போன்ற சில கிருமிகள் நமக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது. 

ஆனால் உங்களை கடுமையாக பாதிக்கும் சில கிருமிகளும் இருக்கத் தான் செய்கிறது. அவற்றில் இருந்து உங்களை எப்படி பாதுகாக்கலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

உங்கள் உடல் நாள் முழுவதும் பல கிருமிகளால் பாதிக்கப் படுகிறது. காலை குளியலறையில் தொடங்கி இரவு உங்கள் உணவுத் தட்டை சுத்தம் செய்வது வரை அனைத்திலும் கிருமிகள் இருக்கத்தான் செய்கிறது. 
கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !
ஒவ்வொரு நாளும் நீங்கள் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகிய வற்றால் பாதிக்கப் படுகிறீர்கள்.

எந்த கிருமி உங்களை நோய்வாய் படுத்தும்?. 

இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கு (இன்ஃப்ளூயன்ஸா போன்றவை) 

தடுப்பூசி போடப்பட்டதா அல்லது கடந்த காலத்தில் கிருமிக்கு ஆளாகி யிருக்கிறதா என்பதையும் இது சார்ந்துள்ளது.

குழந்தைகள் ஒவ்வொரு குளிர் காலத்திலும் அதிகமாக நோயில் விழுவதற்கு காரணங்கள் உள்ளது. குளிர் காலங்களில் சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் அதிகம் காணப்படுகிறது. 
உங்கள் கைகள் அல்லது முழங்கைகளில் இருமுவது அல்லது தும்முவது போன்ற செயல்களை தவிர்க்கவும். உங்கள் கை அல்லது வாயை தொட்ட பிறகு உங்கள் கையை கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

கை கழுவுவதை தவிர்ப்பது நீங்கள் அன்றாடம் செய்யும் தவறுகளில் ஒன்றாகும், இது உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

உங்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று நோரோ வைரஸ் ஆகும். நோரோ வைரஸ் அதிகம் பரவக் கூடியது, இதனை அகற்றுவது மிகவும் கடினமாகும். 

இது கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்துகிறது. வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை இதனால் ஏற்படும் நோய்கள் ஆகும். 

பொது இடங்கள், ஹோட்டல்கள், தங்கு மிடங்கள் போன்றவை இந்த கிருமிகள் அதிகம் பரவும் இடமாகும். உங்கள் கைகள் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் போன்ற வற்றை சுமக்கக் கூடும். 
உங்கள் கைகளில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் தொண்டை பாதிப்பை ஏற்படுத்தும். வைரஸ் களைக் காட்டிலும் பாக்டீரிய தொற்றுகளை நீங்கள் எளிதில் குணப்படுத்தலாம். 

பல பூஞ்சைகள் பாதிப்பில் லாதவை என்றாலும், ஆனால் சிலவகை பூஞ்சைகள் உங்களுக்கு கேண்டிடா போன்ற நோய்களை ஏற்படுத்தலாம். 

இதைத் தொடர்ந்து புரோட்டோசோவா போன்ற ஒட்டுண்ணிகள் உள்ளது. புரோட்டோசோவா என்பது நுண்ணுயிரி களுக்கு உணவளிக்கும் ஒற்றை செல் உயிரினங்கள் ஆகும்.
உங்கள் உடல் கிருமிகளு க்கு எதிராக போராட முடியாத போது நீங்கள் நோயில் விழுகிறீர்கள். தொற்று ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறியாகும். 

தொற்று கிருமிகள் உடலில் பரவும் போது அவை இருமல், வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். 

அனைத்து கிருமிகளும் உங்களுக்கு நோயை ஏற்படுத்தாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 
கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !
ஆனால் நோயை ஏற்படுத்தும் கிருமிகளை கையை கழுவுவதன் மூலம் தடுக்கலாம். 

நீங்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பிறகு கூட, கைகளை கழுவுவது மற்றவர் களுக்கு கிருமிகளை பரப்பாமல் இருக்க உதவும். கை கழுவுவது நோய்களைத் தடுக்க உதவுவதுடன் அது பரவுவதையும் தடுக்கிறது. 

இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்கள் கையை சுத்தமாக கழுவுபவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதை கண்டறியப் பட்டது.

நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கை கழுவுவதை வழக்கமாக கொண்டிருப்பீர்கள். ஆனால் நாள் முழுவதும் அடிக்கடி இதனை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பது நல்லது. 
உதாரணத்திற்கு சாப்பிடுவதற்கு முன், பயணத்தை முடித்த பின், சமைக்கத் தொடங்கும் முன், குப்பைகளை தொட்ட பிறகு, செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகு கைகள் கழுவுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
நீங்கள் பல வருடங்களாக கை கழுவுவதை வழக்கமாக கொண்டிருப் பீர்கள் ஆனால் பெரும்பாலும் அதனை தவறாகவே செய்து வருவீர்கள். 

கை கழுவும் போது குழாயை திறந்து விட்டு ஓடும் தண்ணீரில் கையை வைக்க வேண்டும். அதன் பின் சோப்பு போட்டு தேய்க்க வேண்டும். 

உங்கள் விரல்களுக்கு இடையையேயும், நகங்களுக்கு அடியிலும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 நொடிகள் கை கழுவ வேண்டும். 

மீண்டும் தண்ணீரில் கையை கழுவிட்டு கையை சுத்தமாக உலர வைக்கவும். ஈரமான கைகள் அதிக பாக்டீரியாக்களை கவரும் எனவே அதனை செய்யாதீர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)