ஹெல்மெட் அணியாத பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் !

0
புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப் பட்டதை அடுத்து, விதிமீறலில் ஈடுபடு பவர்களிடம் இருந்து கடும் அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர் போக்குவரத்து காவலர்கள். 
ஹெல்மெட் அணியாத பேருந்து ஓட்டுநர்




சில சமயம் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க வில்லை என்றாலும் வாகனப் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டு, வாகன ஓட்டிகளின் வீட்டிற்கே அபராதம் குறித்த தகவலையும் அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில், நொய்டாவை சேர்ந்த பேருந்து உரிமை யாளருக்கு அபராதத் தொகை செலுத்துமாறு ஆன் லைனில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி, அவரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. 
கிட்டத்தட்ட 50 பேருந்து களுக்கு உரிமை யாளரான அவருக்கு பேருந்து ஓட்டுநர் ஹெல்மெட் அணிய வில்லை எனக்கூறி 500 ரூபாய் அபராதம் செலுத்து மாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

பின்னர், தன் ஊழியர்களிடம் இது குறித்து விசாரித்த போது சீட் பெல்ட் அணியாமல் ஒரு ஊழியர் சென்றதாக அவருக்கு தெரிய வந்தது. 

பின்னர் தனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலு க்கு பதிலளித்த அவர், அதில் தவறு இருப்பதா கவும் அதனை சரி செய்யும் படியும் குறிப்பிட் டிருந்தார்.




மேலும், காவலர்களின் அலட்சியத்தை இதுபோன்ற மின்னஞ்சல்கள் உணர்த்துவ தாக தெரிவித்த அவர், தவறு செய்ததற்கு அபராதம் செலுத்த தான் தயாராக இருப்பதா கவும் 
ஆனால், அதற்கு சீட் பெல்ட் அணிய வில்லை என்ற சரியான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட் டிருந்தார். ஏற்கனவே 4 முறை அந்த பேருந்து ஓட்டுநருக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்திற் காக அபராதம் விதிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings