ஐடி பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

0
சமீபத்தில் பூனாவில், ஒரு மாலை நேரத்தில் பல ஐடி இளைஞர்கள் ஒன்று கூடி மெழுகு வர்த்திகள் ஏந்தி, ரசிலா என்ற பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதோடு ரசிலாவுக்கு நீதி வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி நின்றனர். 
ஐடி பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
பாதுகாப்பான பணியிடம் தேவை, ஊழியர்கள் அடிமைகள் இல்லை என கூக்குரல் விடுத்தனர். இதற்கெல்லாம் காரணம் ரசிலா ராஜு வின் படுகொலை.

கடந்த மாதம் 29ந்தேதி ஞாயிறன்று பூனாவில் உள்ள இஞ்சி வாடியில் தனது அலுவலகத் திலேயே அங்கிருந்த பாதுகாப்பு ஊழியராலே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டுக் கொல்லப் பட்டார் 25 வயதான ரசிலா. 

அது அவரது விடுமுறை நாளாக இருந்தபோதும் மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரையி லான ஷிஃப்டுக்கு ப்ராஜெக்டை முடிக்க வந்திருந்தார் ரசிலா.

அங்கிருந்த செக்யூரிட்டி பாபென் சைக்கியா, அவரை கம்ப்யூட்டர் வயரால் கழுத்தை நெறித்துக் கொலை செய்திருந்தார். 

இந்தக் கொலை செய்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கும் பாபென் குறித்து ஏற்கனவே ரசிலா புகார் செய்திருந்த போதும் நிறுவனம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரசிலாவின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய பட்டா விவரம் !
கடந்த இரண்டு மாதங்களில் பூனாவில் ஐடி துறையைச் சேர்ந்த இரு பெண்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். 

23 வயதான ஆண்ட்ரா தாஸ் டிசம்பர் மாதம் அலுவலகத் துக்கு வெளியே கொலை செய்யப் பட்டார். 
இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பேசுகையில், “எங்களுக்கு அலுவலகத்தில் கூட பாதுகாப்பு இல்லை. யாரைத்தான் நாங்கள் நம்புவது? என குரல் எழுப்பினர். 

ஏன் ரசிலா தனியாக வேலை செய்ய அனுமதிக்கப் பட்டார்? யாருமற்ற சூழ்நிலையில் அவரை வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்லி இருக்கலாம்.

இனி நாங்கள் எப்படி தனியாக அமர்ந்து வேலைப் பார்க்க முடியும்? எங்களுக்கு இங்கு தரப்படும் வசதிகள் குறித்து ஒன்றும் குறையில்லை. ஆனால் பாதுகாப்பின்மை தான் பயமுறுத்து கிறது. 

அலுவலகம் எங்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். 

தமிழகத்தைச் சேர்ந்த ஐடி துறை பெண்கள் சிலரிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் சில கருத்துகளை முன் வைத்தனர்.

முன்பெல்லாம் பெண்களோட சம்பளம் என்பது குடும்பத்திற்கு இரண்டாம் கட்ட தேவை தான். ஆனால் இப்ப இருக்கிற காலக் கட்டத்தில் பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. 

அது மட்டுமில்லாம படிச்சிட்டு படிச்ச துறையில சாதிக்கணும்கிற ஐடியாவும் பெண்களிடம் இருக்கு. ஐடி வேலைக்கு வர வேண்டிய சூழல் வரும் போது சில விஷயங் களை தவிர்க்க முடியாது. 

ஆனால் வேலைக்கு வரும் பெண்களுக்கு கம்பெனிகள் கூடுதலா பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கம்பெனியோட பொறுப்பு அது.
ஐடி பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
ஐடி கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வாகன வசதி உண்டு. இது கம்பெனிக்கு செலவு தான். ஆனா அந்த மாதிரி கேப் கொடுக்க முடியாதுன்னா அவங்களை சீக்கிரமா வீட்டுக்கு அனுப்பணும். 

தாமதமாகும் சூழலில் கேப் கொடுக்கறது அவசியம். சில கம்பெனிகள்ல லேட் நைட்டில் வேலை முடிஞ்சு போறவங் களுக்கு மட்டும் தான் கேப் கொடுப்பாங்க. அது தவறு. 
ராயப்பேட்டை மட்டன் பிரியாணி செய்வது !
சில கம்பெனிகளில் அந்த நேரத்தை தளர்த்தி 8.30 மணிக்கு மேலே கிளம்புறவங் களுக்குத் தராங்க. எங்க கம்பெனியில் இந்த மாதிரி கொடுக்கறாங்க. 

அது மட்டுமில்லாம கேப் ஏற்பாடு செய்யும் போது 5 பேர் இருந்தா ஒரு பெண் கடைசியா இறங்கக் கூடாதுன்னு பார்க்கிறாங்க.

தேவைப் படுகிறவர் களுக்கு எஸ் கார்டு போட்டு அனுப்புறாங்க. பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவாங்க. புகார் கொடுத்தா கண்டிப்பா நடவடிக்கை எடுக்கிறாங்க. 

ரகசியமா விசாரணை நடத்துறாங்க. கவுன்சிலிங் கூட கொடுக்கிறாங்க. 

ஆனா இந்த மாதிரி வசதிகள் எல்லா கம்பெனியிலும் இருக்கான்னு தெரியலை. பெண்களின் தலைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். 
வெறும் ஆண்கள் மட்டும் தலைமையில் இருந்து முடிவு எடுக்கிறதை விடவும் அந்த குழுவில் ஒரு பெண்ணும் இருந்தால் பெண்களின் பிரச்னைகளை சரியாக புரிந்து முடிவெடுக்க முடியும்.

9 மணிக்கு வந்துட்டு 5 மணிக்குப் போற வேலை இது கிடையாது. பொதுவா எங்க க்ளையண்ட்ஸ் இந்தியாவில் இருக்க மாட்டாங்க. 

வெளிநாட்டு க்ளையண்ட்ஸாக இருப்பதால் அன்டைம்மில் வேலை செய்ய வேண்டி வரும். 

அதைத் தவிர்க்க முடியாது. க்ரிட்டிகல் ப்ராஜெக்ட்ஸ் வரும் போது நேரமாவதை தடுக்க முடியாது. இது தான் இப்படித்தான் வேலைன்னு வந்ததுக் கப்புறம் நாம ஜாக்கிரதையா இருப்பது நல்லது.

பொதுவா 8.30 மணிக்கு வேலை முடிஞ்சு போறவங் களுக்கு கேப் வசதி செய்து தராங்க. ஆனால் ஒரு வேளை அந்தப் பெண்ணுக்கு வீடு தூரமா இருக்கு. 

இல்லை அந்த ஏரியா சரியில்லை என்பது போன்ற சூழ்நிலையில் நம்ம நிலையை நம்ம மேலிடத்துக்குத் தெரிவிப்பது நல்லது. 

அப்ப வீட்டில் இருந்து வேலை செய்து தர மாதிரியோ அல்லது வேற எதாவது ஒரு ஆப்ஷனோ கிடைக்கலாம். 

அதிக நேரம் எடுக்கும் ப்ராஜெக்டு களுக்கு அதிகப்படியான ஊழியர்களை நியமிப்பது போன்ற வற்றை நிறுவனங்கள் செய்து தரலாம்.
ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி செய்முறை !
தேவைப் பட்டால் உடன் வருவதற்கு எஸ்கார்டு கேட்டால் கூட செய்து தருவார்கள். அந்தப் பெண் இறங்கி விட்டதை அந்த எஸ்கார்டு வந்து ஆபீஸில் ரிப்போர்ட் பண்ண வேண்டும். 

ஆனா, ப்ரமோஷன் மாதிரியான விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு நம்ம சூழ்நிலையை வெளிப் படுத்தாமல் இருப்பது தவறு. நம்ம பாதுகாப்பு நமக்கு ரொம்ப அவசியம். 
ஐடி பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
நம் வீட்டு விஷயங் களை எல்லார் கிட்டயும் சொல்லக் கூடாது. அது ஆபத்துக்கு வழிவகுக்க லாம். நம்ம கூட வர்றவங்க எல்லாரும் நல்லவங்களாக இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.

4 பேர் போகும்போது அதில் ஒரு பெண் கடைசியா இறங்க வேண்டி இருந்தால் அப்படி செய்யாமல் பெண் ஊழியரை முதலில் இறக்கி விட்டு ஏதாவது ஆண் ஊழியரை கடைசியா இறக்குவாங்க. 

பெண்ணை கடைசியா இறங்க அனுமதிப்பதில்லை. அது ஒரு ரூல். ஆனால் எல்லா இடத்திலும் அந்த சட்டத்தை சரியா கடைப் பிடிப்பாங்க ளான்னு தெரியலை. கேப் ரொம்ப சுற்றி வர வேண்டி இருக்கு.
தினமும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
நீங்க கடைசியா இறங்கிக் கோங்கன்னு டிரைவரோ மற்ற யாராவதோ சொன்னால் நாம் ஒப்புக் கொள்ளக் கூடாது. தேவைப் பட்டால் புகார் கூட தெரிவிக்கலாம். 

நமக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் நம் நேரடித் தலைமையிடம்தான் தெரிவிக்க வேண்டும். அவர் அதைப் புரிந்து கொள்ளா விட்டால் ஹெச் ஆரிடம் கொண்டு செல்லலாம். 

பயத்தினாலோ பதவிக்காகவோ நம் நிலைமையை தெரிவிக்கா விட்டால் நம் பாதுகாப்பு கேள்விக் குறிதான்”.

“ஐடி கம்பெனிகளில் கேப் வசதி இருக்கு. ஒர்க் ஃப்ரம் ஹோம் வசதி கூட இருக்கு. ஆனால் லேட் அவர்ஸ் ஒர்க் பண்ற சூழ்நிலையும் கட்டாயம் இருக்கு. சில கம்பெனிகளில் சொல்வாங்க, 

பெண்களை நாங்க கட்டாயப் படுத்துவது இல்லை என்பாங்க. அவங்களே நல்லபேர் வாங்கணும். 

ப்ரமோஷன் வாங்கணும்னு லேட் ஹவர்ஸ் ஒர்க் பண்றாங் கன்னு. ஆனா அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கிறதே ஐடி கம்பெனிகள் தான்.

உள்ளே போய்ட்டாலே ஒரு போட்டி மனப்பான்மை வந்துடும். அதைத்தான் ‘பியர் பிரஷர்’ என்பார்கள். அங்கே பெண்களும் லேட் அவர்ஸ் ஒர்க் பண்ண தயாரா இருக்கணும். 

நாம ஒரு நாள் சீக்கிரம் கிளம்பினாலும் அந்த வேலையை எடுத்துச் செய்ய ஆள் வந்துடுவாங்க. அப்படி விட்டுக் கொடுக்க முடியாது. கேரியர் ரீதியா அது வேற மாதிரியான இழப்பு களுக்கு வித்தாயிடும். 
ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் !
அதனால இரவு பகலேனு தெரியாத மாதிரி ஒர்க் பண்ண வேண்டி இருக்கும். அப்போது தங்கள் பாதுகாப்பை பத்தி யோசிக்கக்கூட முடியாத நிலைமைக்கு பெண்கள் தள்ளப் படுவாங்க. 
ஐடி பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
அதுக்கப்புறம் வெளிய வந்தா தான் சூழ்நிலை தெரியும். நாம தான் நம்மள பாதுகாத்துக் கணும். தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு செக்யூரிட்டி சரியில்லைன்னு சொல்ல முடியாது. 

லேட்டாச் சுன்னா 8.30 மணிக்குள்ள கேப் புக் பண்ணணும். அதுக்கு மேனேஜர் கிட்ட சைன் வாங்கணும். நிறைய பார்மாலிட்டிஸ் இருக்கு. கேப் ஊரை எல்லாம் சுத்திட்டுப் போகும். 
21 வயதில் திருமணம் தாம்பத்தியம் சிறக்கும் !
அப்படி போகும் போது லேட் ஆகும். அதனால் சிலர் அதை தவிர்ப்பதுண்டு. 

எனவே பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருக்குன்னு சொல்ல முடியலை.” பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஐடி கம்பெனிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

தங்கள் சம்பாத்தி யத்திற்காகத் தான் அவர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்றாலும் 

கம்பெனியின் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருக்கும் இளம் பெண்களின் வாழ்க்கைக்கு ஐடி கம்பெனிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 
மிக முக்கியமாக நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களுக்கு சக பெண்களை எப்படி மதித்து நடப்பது என்பது குறித்த புரிந்துணர்வு வகுப்புகளை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். 
அப்பாவாகப் போகும் ஆண்கள் செய்ய வேண்டியவைகள் !
பெண்களை தற்காப்புக்கலை கற்றுக் கொள்ள சொல்வது, பாதுகாப்பாக இருக்கச் சொல்வது என்பதைக் காட்டிலும் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு உள்ளது என்பதை நிறுவனங்கள் உணர்ந்து அவர்களுக் கான புரிந்துணர்வை உருவாக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)