டெல்லி எண்ணெய் கிடங்கில் தீ ஒருவர் உயிரிழப்பு !

0
டெல்லியின் மேற்கில் பஞ்சாபி பாஹா என்ற பகுதியில் எஞ்சின் ஆயிலை சேமித்து வைக்க உதவும் எண்ணெய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகின்றது.
டெல்லி எண்ணெய் கிடங்கில் தீ




இந்நிலையில், நேற்று அந்த எண்ணெய் கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் ஆயில் எரிபொருள் என்பதால் தீ வேகமாக பரவியது. 
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந் துள்ளார், மேலும், விபத்து ஏற்பட்ட எண்ணெய் கிடங்கு கட்டிடத்திற்குள் சிலர் சிக்கி யிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings