நிலவிற்கு பதில் பெங்களூரில் இறங்கிய விண்வெளி வீரர்? – வீடியோ !

0
விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் நடந்து போவது போல பெங்களூர் சாலையில் வைத்து வீடியோ எடுத்து ரகளை செய்திருக்கி றார்கள் இளைஞர்கள் சிலர்.
நிலவிற்கு பதில் பெங்களூரில் இறங்கிய விண்வெளி வீரர்?
பாடல் நஞ்சுண்ட ஸ்வாமி என்பவர் முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் இறங்கி அங்குள்ள சிறு பள்ளங்க ளிடையே மெதுவாக நடந்து செல்கிறார். 

நிலவில் ஈர்ப்புவிசை குறைவு என்பதால் அவர் மெதுவாக செல்கிறார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டர் ஒன்று அவரை கடந்து போகிறது. கேமரா கோணம் மாறுகிறது. 
கடைசியாக பார்த்தால் அது நிலாவே இல்லை பெங்களூரில் உள்ள பழுதுப்பட்ட சாலை பகுதி அது.

வீடியோவை பார்ப்பவர் களுக்கு முதல் சில வினாடிகள் வரை அது நிலவு போலவும், அவர் விண்வெளி வீரர் போலவுமே தெரிகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)