சீன பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப் படுகின்றது.
கருமுட்டைகளை விற்பனை செய்யும் பல்கலைக்கழக மாணவிகள்
South China Morning Post முன்னெடுத்த விசாரணை யிலேயே இந்த விடயம் கண்டறியப் பட்டுள்ளது. மாணவிகள் ஒவ்வொரு கரு முட்டையையும் 100,000 யுவான் வரையிலான விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படு கின்றது.

கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், உயரமான வர்கள், அழகிய தோற்ற முடையவர்கள் அதிக விலைக்குத் தங்கள் கரு முட்டைகளை விற்பனை செய்து வருவதாக குறிப்பிடப் படுகின்றது.
சீனாவில் கரு முட்டைகளை வாங்குவதற் கும் விற்பதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. அவற்றை நன்கொடை யாக மாத்திரமே வழங்க முடியும்.

சீனாவில் ஒற்றைப் பிள்ளை கொள்கை நீக்கப்பட்டது சட்ட விரோதமாக முட்டைகள் விற்கப் படுவதற்குக் காரணமாய் இருக்கலாம் என கருதப் படுகிறது.