சிலை கடத்தல் தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை - பொன் மாணிக்கவேல் !

0
தமிழகத்தில் பல கோவில்களில் புராதன சிலைகள் பல கொள்ளை யடிக்கப் பட்டதாக புகார்கள் வந்தன. இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்தது. 
சிலை கடத்தல்



அவருக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும், ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. 

இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப் பட்டது.

அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த பொன் மாணிக்கவேல், “சிலை கடத்தல் வழக்கு விசாரணைக் காக கும்பகோணம் சிறப்பு நீதி மன்றத்துக்கு செல்லும் அதிகாரி களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படுவ தில்லை.

அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்குக்கூட இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை.

ஐகோர்ட்டு உத்தர விட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் ஆவணங் களைக் கேட்டால், தரமறுத்தார். 
ஏன்? என்று காரணம் கேட்டதற்கு ஆவணங் களைக் கொடுத்தால் தன்னை இடைநீக்கம் செய்து விடுவதாக கூடுதல் டி.ஜி.பி., ஒருவர் மிரட்டுவதாக கூறுகிறார்.
பொன் மாணிக்கவேல்



இதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சிலை கடத்தல் தொடர்பாக ஒரு வழக்கு கூட எங்களால் பதிவு செய்ய முடிய வில்லை. இது நாடா? இல்லை காடா? என தெரிய வில்லை” என்று ஆவேசமாக கூறினார்.
இதை யடுத்து நீதிபதிகள், “சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தர விட்டும், அதை செய்து கொடுக்காமல் அரசு தொடர்ந்து உத்தரவை அவமதிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

“துப்புரவு பணியாளருக்குக் கூட ஊதியம் வழங்க அரசால் முடியாதா?. இந்த ஐகோர்ட்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது. 

அதை கூடுதல் டி.ஜி.பி., எப்படி தடுக்க முடியும்?. தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்னர் தான் வழக்குகள் பதிவு செய்யப் படுகிறதா?” என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
பின்னர், இந்த வழக்கிற்கு தமிழக அரசு வருகிற செப்டம்பர் 11-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings