ஸொமோட்டோ உருவாக காரணமாக இருந்த இரு நண்பர்கள் !

0
டெல்லியில் இருந்த ஓர் அலுவலகத்தின் கேஃபட்டீரியா அது. எல்லோருக்கும் ஒரே நேரத்தில் பசிக்கும் இல்லையா? அதனால் மதிய உணவு இடைவேளை யில் அங்கே கூட்டம் நிரம்பி வழியும். 
ஸொமோட்டோ - Zomatoஆயிரக்கணக் கான ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனம் என்பதால் அங்கே 20-க்கும் மேற்பட்ட கடைகள் உண்டு. ஒவ்வொரு கடையிலும் 10-15 மெனு கார்டுகள் வைத்திருப் பார்கள். 

ஆனாலும் போதாது. வரிசையில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து நைசாக மெனு கார்டை எடுத்துக் கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்து `என்ன ஆர்டர் செய்யலாம்?’ என ஒரு கூட்டம் பார்க்கும். வேலை முடிந்ததும் மெனு கார்டைப் பலர் கடையில் வைப்பதில்லை. 

இதனால் உணவுக்கு மட்டுமல்ல; மெனு கார்டுக்கே அங்கே அதிக டிமாண்டு. எல்லோரும் மெனு கார்டைத் தேடிய போது தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சட்டா என்ற இரண்டு நண்பர்கள் மட்டும் அதற்குத் தீர்வைத் தேடினர். 

அனைத்து மெனு கார்டையும் ஸ்கேன் செய்து, அவர்கள் நிறுவனத்தின் இன்ட்ராநெட் போர்ட்டலில் (Intranet என்பது அந்தந்த நிறுவன ஊழியர் களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் இணையதளம்) அப்லோடு செய்து விட்டார்கள்.
அவ்வளவு தான். அன்றிலிருந்து அவர்கள் இன்ட்ராநெட் போர்ட்டலுக்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. பிரச்னையும் தீர்ந்தது. நண்பர்கள் இருவருக்கும் ஆச்சர்யம். அதே நேரம் இன்னொரு ஸ்பார்க் அவர்கள் மூளையில் தெறித்தது.

“நம்ம கேன்டீன்ல பண்ணுனத எல்லா ஹோட்டலுக்கும் பண்ணினா?”

அலுவலக வேலைகளை முடித்து விட்டு மாலையில் சீக்கிரம் கிளம்பி விடுவார்கள் நண்பர்கள். ஒவ்வொரு ஹோட்டலுக்கும் போய் மெனு கார்டைக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். சில இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். 

இன்னும் சில இடங்களில் ‘நைசாக’ வீட்டுக்கே எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். அதை யெல்லாம் Foodiebay என்ற இணைய தளத்தில் பப்ளிஷ் செய்தார்கள். அப்போது அழகியலுக்கு இவர்களும் முக்கியத்துவம் கொடுக்க வில்லை; வாடிக்கை யாளர்களும் கொடுக்க வில்லை. 
Foodiebay
தேவையான தகவல்கள் அதிலிருக்கிறதா என்பதே அப்போது முக்கியம். சில நாள்களிலேயே Foodiebay பிரபலமானது. ஹோட்டல் தேடுபவர்களில் அதிகமானோர் இங்கே விசிட் அடிக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்ட சில உணவகங்கள், இவர்கள் இணைய தளத்தில் விளம்பரம் செய்ய அணுகினார்கள். “இது ஒர்க் அவுட் ஆகுது மச்சி” என சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள் தீபிந்தரும் பங்கஜும். டெல்லியில் ஹிட் அடித்ததும் Foodiebay-யை மற்ற நகரங்களு க்கும் கொண்டு செல்ல விரும்பினார்கள். 

ஆனால், மாலை நேரத்திலும் வார இறுதிகளிலும் மட்டுமே இந்த வேலையைச் செய்தால் அது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. அடுத்த 6 மாதங்களு க்குத் தேவையான வாடகைப் பணமும், சாப்பாட்டுச் செலவுக்கான பணமும் Foodiebay மூலமே சேர்ந்ததும் இருவரும் வேலையை விட்டனர்.

விஷயம் டெல்லியைத் தாண்டியது. முதலீட்டாளர் களுக்கும் Foodiebay பற்றித் தெரிய வந்தது. முதல் முறையாக 7 கோடி ரூபாயை இந்த இரண்டு நண்பர் களையும் நம்பி ஒரு நிறுவனம் தந்தது. 
சாதா போனிலே ஸ்னேக் கேம் ஆடியவர்கள் கையில் ஸ்மார்ட்போன் கிடைத்தால் பப்ஜி ஆடாமலா இருப்பார்கள்? வேக மெடுத்தார்கள். முதலீடு தந்தவர் நிறுவனத்தின் பெயரில் சின்னப் பிரச்னை இருப்பதைச் சுட்டிக் காட்டினார். 

கடைசி நான்கு எழுத்தில் ஏற்கெனவே eBay என்றொரு நிறுவனம் இருந்தது. அதனால், பெயர் மாற்றலாம் என்ற யோசனையை தீபிந்தரும் பங்கஜும் ஏற்றுக் கொண்டார்கள். 

அவர்கள் யோசித்து வைத்த இரண்டு பெயர்கள்: 

Zomato, Forkwise. இரண்டு இணையதள முகவரி களையும் தேடியவர் களுக்குப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. 
Zomato, ForkwiseZomato என்ற டொமைனின் விலை 10,000 டாலர். Forkwise வெறும் 10 டாலர். கிடைத்த 10 லட்சம் டாலரில் 10,000 டாலரை இதற்கே செலவு செய்வதா என forkwise தளத்தையே வாங்கி விட்டார்கள். விஷயத்தைக் கேட்டதும் முதலீடு தந்தவருக்குக் கோபம் வந்து விட்டது. 

சொந்தச் செலவில் Zomato வாங்கித்தரவா எனக் கேட்டே விட்டார். Zomato என்ற பெயர் அவ்வளவு அழகாக இருப்பதாக அவர் சொல்ல, நண்பர்களும் அதையே வாங்கி விட்டார்கள். Zomato.com இப்படித் தான் பிறந்தது.

ஒரு ஸ்டார்ட் அப்பின் வெற்றிக்கு அதன் பெயர் அவ்வளவு முக்கியமா? நிச்சயம் முக்கியம். பிரபலமான பின் அந்தப் பெயர் என்னவாக இருந்தாலும் ஓ.கே. ஆரம்பக் கட்டத்தில் ஒரு பெயர் வாடிக்கை யாளரை ஈர்க்கலாம். ஒரு முறை வந்தவரின் நினைவில் எளிதில் தங்கி மீண்டும் வர வைக்கலாம். 

எல்லைகளைத் தாண்டிப் போகும் போது மொழியால் பிரச்னை வராத பெயராக இருந்தால் நல்லது. புதுப்பெயர் வந்ததும் ஸொமேட்டோ சூடு பிடித்தது. லட்சக்கணக் கானோர் ஸொமேட்டோவைப் பயன்படுத்தத் தொடங்கி னார்கள். அடுத்தகட்ட முதலீடும் வந்தது. 
டெல்லியில் தொடங்கிய இந்த சேவை இந்தியாவின் மற்ற மெட்ரோக் களுக்கும் விரிவடைந்தது. கைப்பேசிச் செயலியையும் அறிமுகப் படுத்தினார்கள். இப்போது ஸொமேட்டோ மெனு கார்டு மட்டும் தராமல், அந்த உணவகங்களை வாடிக்கை யாளர்கள் ரேட் செய்யவும் உதவியது. 

எந்த உணவகம் அதிக ரேட்டிங் வாங்கியதோ அதற்கு அதிக வாடிக்கை யாளர்கள் கிடைத்தார்கள். பின்னர், எந்த உணவகத்தில் நமக்கு டேபிள் வேண்டுமோ அதையும் ஸொமேட்டோ மூலமே முன்பதிவு செய்ய முடிந்தது. 
தீபிந்தர் பங்கஜ்இதன் மூலமும் கணிசமான வருமானம் பெற்ற ஸொமேட்டோ கொஞ்சம் கொஞ்சமாக உணவுத் துறையையே மாற்றத் தொடங்கியது. ஸொமேட்டோ நல்ல வருமானம் பெறத் தொடங்கியதும், அடுத்து என்ன ஸ்டார்ட் அப் என யோசிக்கத் தொடங்கினார்கள் நண்பர்கள். 
இன்னொரு புதிய ஏரியாவில் கால் வைப்பதைவிட உணவுத் துறையிலே வேறு என்ன சேவைகளைச் சேர்க்கலாம் என யோசிப்பது சரியானது என்ற முடிவுக்கும் வந்தார்கள். அப்போது தான் இந்தியாவைத் தாண்டிக் கால் வைத்தது ஸொமேட்டோ. 
முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஸொமேட்டோ வந்தது. மக்கள் தொகை அடிப்படையில் அது சிறிய நாடு தான். ஆனால், அங்கே ஒரு வேளை உணவுக்கு நாம் செலவழிக்கும் செலவை விட அதிகமாகச் செலவாகும். அதனால் ஸொமேட்டோவு க்கும் நல்ல வருமானம் கிடைத்தது. 

இணையத் தொழில் நுட்பத்தின் முக்கியமான நன்மை இது. எந்த நாட்டிலிருந்து கொண்டும் நம்மால் நம் சேவையை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்க முடிந்தால், இப்படி அதிக வருமானம் பெறலாம். 

இந்தியாவின் சம்பளம் தந்து அமெரிக்கர் களுக்கு சேவை அளிக்கும் போது நிறைய பணம் மிச்சமாகும். 2015-ல் ஸொமேட்டோ பல உலக நாடுகளில் கிளை பரப்பிக் கோலோச்சிக் கொண்டிருந்த போது தான் இங்கே வீடு தேடி வந்து உணவை டெலிவரி செய்யும் வசதிகள் அறிமுகமாகி யிருந்தன. 
‘இதுவும் நம்ம ஏரியா தானே’ என ஸொமேட்டோவும் அதில் கால் பதித்தது. இப்போது இந்தியாவின் பல நகரங்களில் ஸ்விகியை முந்தி யிருக்கிறது ஸோமேட்டோ. சமீபத்தில் அதன் ஆண்டறி க்கையை வெளியிட்டது ஸொமேட்டோ. 

கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக வருமானம் (1436 கோடி) கிடைத் திருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு லட்சம் உணவகங்கள் ஸோமேட்டோ வுடன் இணைந்திருக் கின்றன. 1,80,000 டெலிவரி பாய்ஸுக்கு ஸோமேட்டோ வேலை தந்திருக்கிறது.
டெலிவரி பாய்ஸுக்கு ஸோமேட்டோ வேலை
ஓர் அலுவலக கேன்டீனில், காபி குடிக்கும் நேரத்தில் தோன்றிய ஒரு ஜீபூம்பா, பத்தே ஆண்டுகளில் 25,000 கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்ஜி யத்துக்குக் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இது தான் உண்மை. 

வானமே எல்லை என்பது கூட போன நூற்றாண்டோடு பொய்யாய்ப் போய் விட்டது. இப்போது அதையும் தாண்டி பிளாக் ஹோல் வரை நாம் போய் விட்டோம். ஸ்டார்ட் அப் தொடங்கி வெற்றி பெற்றவர் களைப் பட்டியலிட்டால்... 

ஒருவர் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவராக இருந்தால், இன்னொருவர் பிஹெச்.டி முடித்திருப்பார்; ஒருவர் பெரும் தொழிலதிபரின் மகன் என்றால், இன்னொருவர் மூன்று வேளை உணவுக்கே வழியில்லாத வராக இருந்திருப்பார்; 
ஒருவர் அமெரிக்கா விலிருந்து இந்தியா வந்தவர் என்றால், இன்னொருவர் இதற்காக அமெரிக்கா போனவராக இருப்பார்; ஒருவர் 18 வயது இளைஞர் என்றால், இன்னொருவர் 65 வயதைத் தாண்டிய சீனியர் சிட்டிசனாக இருப்பார். 

பிரச்னைகளு க்குத் தீர்வு காணும் திறனும் அதைச் செய்து பார்த்து விட வேண்டு மென்ற முனைப்பும் மட்டுமே இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை. மற்ற எல்லாமே வெவ்வேறாக இருக்கும். அதுதான் ஸ்டார்ட் அப்புகள் பற்றிய பின்னணிக் கதைகளை சுவாரஸ்ய மாக்குகிறது.

ஸ்டார்ட் அப் தொடங்க...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)