செல்பி எடுக்க முயன்ற நபரை தூக்கி வீசிய யானை !

0
சாலையோரம் நின்றிருந்த யானை அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற நபரை யானை தாக்கியதால் படுகாய மடைந்தார். ஈரோடு கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (36). 
செல்பி எடுக்க முயன்ற நபரை தூக்கி வீசிய யானைஇவர் நேற்று மாலை ஈரோட்டி லிருந்து தாளவாடி செல்வதற் காக காரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சத்திய மங்கலம் - மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

ஆசனூர் அடுத்துள்ள வன சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை யோரம் யானைகள் நின்று கொண்டிருந்தன. யானைகளை கண்ட ஞானசேகரன் காரை நிறுத்தி விட்டு அருகே சென்று செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க முயன் றுள்ளார்.
அப்போது ஆத்திர மடைந்த ஒரு யானை துரத்தியதில் ஞானசேகரன் தவறி விழுந்தார். யானை ஞானசேகரனை தும்பிக்கை யால் தூக்கி வீசியதில் படுகாய மடைந்தார். 

இதை கண்ட அவரது நண்பர்கள் யானையை சத்தம் போட்டு விரட்டி விட்டு உடனடியாக ஞான சேகரனை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக் காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)