பஸ் - மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசம் - கெஜ்ரிவால் !

0
பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிக ளிலும் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 
பஸ் - மெட்ரோ ரெயிலில் இலவசம்



இந்த நிலையில் டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதிக கட்டணம் என்பதற்காக எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய முடியாத பெண்களுக் காக இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. 
எனினும், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உண்மை யிலேயே தேவைப்படும் பெண்களுக்கு இந்த சலுகையை விட்டுக் கொடுக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த திட்டத்தால் டெல்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings