சீனா ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம் !

0
இணைய தளத்தில் எது, எப்போது வைரலாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இன்று வைரலாகும் ஒரு விஷயம் நாளை மறக்கப்படலாம். ஆனால் சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஆற்றில் மிதந்த கட்டிடம்



அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ சமூக வலைத் தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் இணையதள ஆர்வலர்கள் இந்த வீடியோ குறித்து வேடிக்கை யான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மிதக்கும் ஓட்டலான அந்த 5 மாடி கட்டிடம் கொள்கை மாற்றம் காரணமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, 2 படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. 
ஆனால் பார்ப்பதற்கு அந்த கட்டிடம் தானாகவே மிதந்து செல்வது போலவே இருப்பதுதான் அந்த வீடியோ வைரலாவ தற்கு காரணம்.

ஆனால் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. ஆனால் அப்போது இந்த வீடியோ இந்த அளவுக்கு வைரலாக வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings