2 நதி இணையும் இடத்தில் கட்டப்பட்ட அணை - என்ன ஆனது தெரியுமா?

0
தமிழகத்தின் அணைகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங் களோடு ஒப்பிட்டால் மிகக் குறைவு. இருக்கும் அணைகளையும் பராமரிக்காமல் பாழடைய விட்டால், பின் புதிய அணை கட்ட அனுமதி கேட்கவே நாம் தகுதி யற்றவர்கள் ஆகி விடுவோம். 
2 நதி இணையுமிடத்தில் கட்டப்பட்ட அணை
புதிதாக ஒரு நீர் நிலையை உருவாக்குவதை விட இருக்கும் நீர்நி லைகளை முறையாகப் பராமரிப்பது தான் எளிது; செலவும் குறைவு. ஆனால், அதைச் செய்யாமல் நாம் வீணடிக்கும் அணைகள் தமிழகத்தில் ஏராளம். அப்படியோர் அணையின் கதை இது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சியில் இருக்கிறது வீடூர் அணை. மற்ற அணையைப் போல் இல்லாமல் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக் கிறது வீடூர் அணை. 

சங்கராபரணி ஆறு மற்றும் பெரியாற்றின் சங்கமிக்கும் இடமது. மொத்தம் 3200 ஏக்கர் பாசனப் பரப்பளவு கொண்டது இந்த அணை. வீடூர் அணை கொஞ்சம் பழைய அணைதான். 
இன்னமும் அந்தப் பகுதி விவசாயி களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும் கூட பராமரிப்பு இல்லாததால் காட்சிப் பொருளாகவே காணப் படுகின்றது. இந்த அணை முழுமையாக நிரம்பி இரண்டு வருடம் ஆகிறது. 

இதற்கு மழை ஒரு காரணம் என்றாலும் கூட அணையை ஆழப்படுத்தாமல் இருப்பது மற்றொரு முக்கிய காரணம். 2004 ஆம் ஆண்டு அணை நிரம்பியது என்றால் 135 நாள்களுக்கு மேல் அதாவது ஒரு போகத்திற்கும் அதிகமாகப் பாசனத்திற்குத் தண்ணீர் வருவாய் இருந்தது. 

நாளடைவில் 135 நாள்களு க்குத் தண்ணீர் தொடர்ந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பின்னணியில் அணையின் கொள்ளளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இரண்டு ஆற்றின் சங்கமம் என்றதால் அணையில் மண் சேர்ந்து விடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 
மண் சேர்ந்தால் ஆழம் குறைந்து அணையின் கொள்ளவும் குறையும். அதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அணையை ஆழப்படுத்துவதின் அவசியத்தை உணரலாம். 10 வருடத்திற்கு முன்பு தஞ்சாவூர் போல் காட்சி அளிக்குமாம் வீடூரூம் சுற்று வட்டார கிராமங்களும். 

இன்று தண்ணீர் வளம் குறைந்துள்ள தால் விவசாய நிலம் சவுக்கு மரத்தோப்பாக மாறி இருக்கின்றது என விவசாயிகள் வேதனை தெரிவித் துள்ளனர். அணையைச் சுற்றி வீடூர் பூங்காவும் ஒன்று இருக்கிறது. 

30, 40 ஆண்டு களுக்கு முன்பு திரைப் படங்களுக்கு இங்கே ஷூட்டிங்கும் நடந்திருக் கிறது. அந்தளவுக்கு அழகாக இருந்த அந்தப் பூங்கா இன்று பராமரிப் பில்லாமல் பழுதடைந்துள்ளது. 
வீடூர் அணை
பூங்காவில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று சுவரில் அறிவுரைக்கப் பட்டிருந்தது. ஆனால், நெகிழி மலை போலக் குவிந்துள்ளன. மேலும், தற்போது இந்தப் பூங்காவே மது அருந்தும் இடமாக மாறியுள்ளது வருத்தத்திற்குரிய விஷயம்.

இது குறித்து வீடூர் பாசன சங்கத் தலைவர், மணவாளன் அவர்களைச் சந்தித்து பேசினேன். `கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அணை சம்பந்தமாக மனு கொடுத்து வருகிறோம். 

மழைக் காலத்தில் அணையின் நீர் வரவை அதிகப் படுத்த பெரியாறு சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் திசை மாறாமல் இருக்க தடுப்பணை கட்டுவதற் காகவும் அதிகாரியிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. 
அதிகாரிகள் நிதி வந்தால் பராமரிக்கலாம் என்று கூறி கிடப்பில் போட்டு விடுகிறார்கள். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றிருக்கி றார்கள். 
அரசு அணையை ஆழப்படுத்தினால் ஒரு போகம் இல்லை; இரண்டு போகத்திற்கு தண்ணீர் வருவாய் உள்ளது" என்று குறிப்பிடுகிறார்.

விரைவில் அரசு வீடூர் அணையை ஆழப்படுத்தவும், அதை யொட்டிய வாய்க்காலைச் சீரமைக்கவும், வீடூர் அணையைச் சுற்றுலா தலமாக மாற்றவும் வீடூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்து கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings