காஷ்மீரில் பக்ரீத் தொழுகைக்கு பின் மீண்டும் 144 !

0
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதை யடுத்து கலவரம் ஏற்படலாம் என கருதி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 
காஷ்மீரில் 144



பொது மக்கள் தெருவில் இறங்கி வன்முறை யில் ஈடுபடலாம் என கருதுவதால் மிகப் பதட்டமான இடங்களில் ஊரடங்கு உத்தரவும் மற்ற இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை தொழுகைக்கு செல்ல வசதியாக சில இடங்களில் தடை உத்தரவு சில மணி நேரங்களுக்கு விலக்கி கொள்ளப் பட்டது. ஆனால் தொழுகைக்கு வந்தவர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற் காக நேற்று தடை உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறந்தன. மார்க்கெட்டு களும் இயங்கின. 
ஏ.டி.எம்.களும் திறந்திருந்தன. அந்த நேரத்திலும் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது. ஸ்ரீநகரில் பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பக்ரீத் தொழுகைக் காக காலையில் தடை உத்தரவு விலக்கி கொள்ளப் பட்டது. 

அப்போது அருகில் உள்ள மசூதிகளுக்கு மட்டும் சென்று தொழுகை நடத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டது. அதே நேரத்தில் ஆயிரக்கணக் கானோர் கூடி தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கப் பட்டது. 

குறுகிய அளவிலேயே கூட்டம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இது சம்பந்தமாக பாதுகாப்பு படையினர் வாகனங்களில் ஒலி பெருக்கியில் அறிவிப்புகளை வெளியிட்டு சென்றனர். 

வழக்கமாக பக்ரீத் தொழுகை நடைபெறும் பல மசூதிகளில் இன்று தொழுகைக்கு அனுமதிக்கப் படவில்லை. ஆனாலும், தொழுகைக்கு வந்தவர்களும், சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். கல்வீச்சு சம்பவமும் நடந்தது. 

இன்று மதியம் வரை வேறு பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெற வில்லை. பக்ரீத் தொழுகைக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.



டெலிபோன் மற்றும் இணையதள வசதிகள் தொடர்ந்து 7 நாட்களாக முடக்கப் பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகையை யொட்டி அவை செயல்பட அனுமதிக்க ப்படும் என எதிர் பார்க்கப் பட்டது. 

ஆனால் கலவரம் வெடிக்கலாம் என கருதுவதால் செயல் பாட்டுக்கு அனுமதிக்க வில்லை. இதற்கிடையே வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கும், முக்கிய தகவல்களை கூறுவதற்கும் போலீஸ் துறையே 300 இடங்களில் பொது டெலிபோன் வசதியை ஏற்படுத்தி இருந்தனர். 
அதன் மூலம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப் பட்டது. முன்னாள் முதல்-மந்திரிகள் மெகபூபா முக்தி, உமர் அப்துல்லா ஆகியோர் தொடர்ந்து காவலிலேயே வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் முதலில் ஹரிநிவாஸ் மாளிகையில் வைக்கப் பட்டிருந்தனர். 

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உமர் அப்துல்லாவை அங்கிருந்து அழைத்து சென்று வனத்துறைக்கு சொந்தமான ‘ஸ்பிளெண்டிட் ஹட்’ என்ற என்ற விடுதியில் தங்க வைத்தனர். இருவரும் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings