கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?

0
ஒரு காலத்தில், கிரெடிட் கார்டு வைத்திருப்பது அந்தஸ்தின் வெளிப்பாடாக இருந்தது. வங்கிகளும் அதிக அளவு பரிவர்த்தனை செய்பவர் களுக்கு மட்டுமே கிரெடிட் கார்டு கொடுத்தார்கள். 
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
இன்று, நிலை மாறி விட்டது. 'கிரெடிட் கார்டு வேண்டுமா' எனக் கேட்டு, ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அழைப்பாவது வந்து விடுகின்றன. 

ஏதோ ஓர் ஆவலில் கிரெடிட் கார்டை வாங்கியவர்கள், எங்கோ ஓரிடத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். 

விகடன் வாசகர் சோனு சில்வஸ்டர், இது தொடர்பாக விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் ஒரு கேள்வியை எழுப்பி யிருந்தார்.

எனது கிரெடிட் கார்டை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி வங்கி, ரிசர்வ் வங்கி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன். 

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அடுத்து, நான் என்ன செய்ய வேண்டும்?

தனியார் வங்கி கிரெடிட் கார்டு பிரிவு மேலாளர் ரமேஷிடம் இந்தக் கேள்வியை வைத்தோம்.
கிரெடிட் கார்டில் உங்களுக்குத் தெரியாமல் அல்லது உங்களால் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்து, பணம் எடுக்கப் பட்டால், உடனடியாக கிரெடிட் கார்டுக்குத் தொடர்புடைய வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். 

நீங்கள் புகார் அளித்தவுடன், உங்கள் கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்படும். அதோடு, உங்களால் அங்கீகரிக்கப் படாத அந்தப் பணப் பரிவர்த்தனை குறித்து புகார் எடுத்துக் கொள்ளப்படும். 

இந்தப் புகார்குறித்து வங்கி சார்பில் விசாரிக்கப் படும். நடைபெற்ற அந்தப் பரிவர்த்தனை, உங்களால் நடைபெற வில்லை என்பது வங்கி சார்பில் உறுதி செய்யப்படும் பட்சத்தில், 

அந்தப் பணம் உங்கள் கணக்கில் மீண்டும் அளிக்கப்படும். இது நடக்க அதிக பட்சமாக 120 நாள்கள் ஆகும்.
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
உங்கள் கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்பட்டவுடன், மீண்டும் புதிய கிரெடிட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். 

புதிய கார்டுக்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். கட்டணம் மற்றும் கார்டு வழங்கப்படும் நாள், வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.

உங்களுக்குத் தெரியாமல் அல்லது உங்களால் அங்கீகரிக்கப் படாத பரிவர்த்தனை நடைபெறும் பட்சத்தில், நீங்கள் இழந்த பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்க 100 சதவிகிதம் வாய்ப்புள்ளது. 

ஒரு வேளை, நீங்களே உங்களின் கார்டு பற்றிய விவரங்களை வேறொருவரிடம் கொடுத்து, 

அதன் மூலம் அந்த மோசடி நடைபெற்றிருக்கு மானால், அதை வங்கி உறுதி செய்யு மானால், அந்தப் பரிவர்த்தனை க்கு வங்கி பொறுப்பேற்காது."

உங்களுக்குத் தெரியாமல் நடைபெறும் பரிவர்த்தனை களை எப்படித் தடுப்பது..?

'உங்களது கிரெடிட் கார்டின் கடன் வரையறை (லிமிட்) உயர்த்தப் பட்டுள்ளது; இதை உறுதிசெய்ய கிரெடிட் கார்டு எண்ணைத் தெரிவிக்க வேண்டும்'. 

'நான் வங்கி மேலாளர் பேசுகிறேன், உங்கள் கார்டு செயலிழக்கப் போகிறது... அதைப் புதுப்பிக்க வேண்டும்' என்றெல்லாம் வரும் அழைப்புகள் மூலம் ஏமாறுபவர்கள் ஏராளம். 
உண்மையில், இது போன்ற காரணங் களுக்காக எப்போதுமே வங்கியிலிருந்து, வாடிக்கை யாளர்களுக்கு அழைப்புகள் வருவதில்லை.

உங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப் பட்டால் என்ன செய்ய வேண்டும்?
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
வாடிக்கையாளரைத் தவிர்த்து கிரெடிட், டெபிட் கார்டு போன்ற வற்றின் ரகசிய எண்கள், வங்கி அதிகாரிகள் உட்பட யாருக்குமே தெரியாது. 

உங்களின் ரகசிய எண்களை யாரிடமும் தெரிவிக்காதீர்கள். பெரும்பாலும் வெளிநாட்டுப் பரிவர்த்தனை களில் தான் இப்படியான தவறுகள் நிறைய நடக்கின்றன. 

நீங்கள் சர்வதேச பரிவர்த்தனை செய்யும்போது, மிகுந்த கவனத்தோடு செய்யுங்கள். 

காரணம், பல வெளிநாட்டு பரிவர்த்தனை களை மேற்கொள்ள உங்களது கார்டு எண்ணும், ரகசிய எண்ணுமே போதுமானது. 

One Time Password என்னும் வசதி பெரும்பாலான வெளிநாட்டு பரிவர்த்தனை களில் இருக்காது.

உங்களது புகாரை வங்கி எடுக்கவில்லை என்றால், என்ன செய்வது?

வாடிக்கை யாளர் அனைத்து விதமான வழிகளிலும் முயன்று குறைகளைப் பதிவு செய்த பிறகும், வங்கி அவற்றைத் தீர்க்கவில்லை என்றால், 

குறைதீர்ப் பாணையத்தில் உள்ள, வங்கி முறைகேடுகள் அலுவலரிடம் (Banking Ombudsman) முறையிட்டுத் தீர்வு காணலாம். இதற்காக, இந்தியாவில் 21 பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.
குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப் பெற்றுக் கொண்ட ஒருமாத காலத்திற்குள் பதிலளிக்கா விட்டாலோ, புகாரை வாங்க மறுத்தாலோ, 

திருப்திகரமாகப் பதிலளிக்கா விட்டாலோ, இந்தக் குறைதீர்ப் பாணையத்திடம் வாடிக்கையாளர் தனது புகாரை அளிக்கலாம்.
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
குறைதீர்ப் பாணையத்திடம் புகார் அளிப்பதற்கு முன்பாக, வாடிக்கையாளர் புகாரில் குறிப்பிடப்படும் வங்கிக்கு எழுத்து வடிவிலான வேண்டுகோள் விடுத்து, திருப்திகரமான தீர்வினைப் பெற முயற்சி செய்திருக்க வேண்டும். 

சம்பவம் நடந்து ஒருவருட காலத்திற்குள் குறைதீர்ப் பாணையத்திடம் புகார் அளிக்கப்பட வேண்டும்.
கடிதம் மூலம் வங்கி குறை தீர்ப்பாணையத்திடம் புகார் தரலாம். அல்லது https://rbi.org.in/ என்ற இணைய தளத்திற்குச் சென்று அதில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் புகார் செய்யலாம். 

புகார்தாரர் ஆணையத்திற்குத் தேவைப்படும் அனைத்துத் தகவல் களையும் அளிக்க வேண்டும்.
குறைதீர்ப்பாயம், வாடிக்கை யாளரின் குறையைத் தீர்க்க எந்தவித கட்டணமும் வசூலிப்ப தில்லை. 

வங்கி முறைகேடுகள் அலுவலரின் முடிவு தனக்குச் சாதகமாக இல்லாத போது, வங்கி வாடிக்கையாளரோ அல்லது வங்கியோ நீதிமன்றத்தை அணுகலாம்!..... விகடன் 

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !