ரயிலின் பின்பக்கத்தில் 'X'-ன்னு எழுதபட்டு இருக்கும் - அது ஏன் தெரியுமா?

0
கார், மோட்டார் சைக்கிள், விமானங்கள், பேருந்துகள் என்றிருந் தாலும் பெரும்பாலான இந்தியர் களுக்கு முதன்மை யான போக்கு வரத்து என்றால் இன்றும் ரயில்கள் தான்.
ரயிலின் பின்பக்கத்தில் 'X'




தினமும் லட்சக்கணக் கான பயணிகள் தங்களது தேவை களுக்காக ரயில்வே போக்கு வரத்தை பயன்படுத்தி வருவது இன்றும் தொடர்கிறது.

கன்னியா குமாரி முதல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை ரயில் வழி பயணம் செய்வோர் இன்றும் இருக்கிறார்கள். நீண்ட தூர ரயில் பயணங் களை மேற்கொள்ப வர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள்.
'X' என்ற குறி மஞ்சள் நிறத்தில்
தொடர் வண்டிகளின் பயன்பாடு குறித்த பலரும் பலது அறிந்திருந் தாலும், ரயில்வே செயல் பாடுகளில் பின்பற்றப்படும் சில விஷயங்கள் இன்றும் நம்மை வியப்பிற்கு உள்ளாக்கு கின்றன.
அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் 'X'. இந்தியாவில் மக்கள் பயணம் செய்யக் கூடிய எல்லா ரயில்களின் கடைசிப் பெட்டியில் 'X' என்ற குறி மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு இருக்கும்.

ரயிலில் பயணம் செய்த அல்லது பயணம் செய்து கொண்டு இருக்கும் பலரும் 'X' என்ற குறியை கவனித்திருப்போம்.
X' என்பதற் கான அர்த்தம் என்ன?




ஆனால் இது எதை குறிக்கிறது..?? 'X' என்பதற் கான அர்த்தம் என்ன..? என்ற சிந்தனை ஒரு சிலருக்கு தான் தோன்றி யிருக்கும்.

ஒரு ரயில் முழுமை யடைந்த நிலையில் உள்ளது, அதில் எந்த பழுதோ அல்லது பிரச்சனையோ இல்லை என்பதை குறிக்க 'X' என்ற குறி பயன்படுத்தப் படுகிறது.

எஞ்சின் தொடங்கி ரயிலின் எல்லா பெட்டிகள் மற்றும் அதனுடைய இயக்கத் திறனை ஆராய்ந்த பிறகே, 'X' குறி ரயிலின் கடைசி பெட்டியில் வரையப் படுகிறது.
ரயிலின் கடைசி பெட்டியில் 'X' குறி
மேலும் ரயில்களின் இடைப்பட்ட பெட்டிகள் மற்றும் அதன் இணைப்பு களில் எந்த விதமான பழுதோ, பிரச்சனையோ இல்லை என்பதை 'X' குறி குறிக்கிறது.

தொடர்ந்து இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும்.
ரயிலின் கடைசிப் பெட்டியில் சிவப்பு விளக்கு
தற்போது மின்சாரத்தால் இயங்கும் இந்த விளக்கின் பயன்பாடு முன்னதாக எண்ணெய் கொண்டு ஒளிர்வூட்டப் பட்டது குறிப்பிடத் தக்கது.

ரயிலின் கடைசிப் பெட்டியில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவலும் உள்ளது. அது தான் 'LV' என்ற ஆங்கில வார்த்தை களை தாங்கிய பலகை. 

கடைசிப் பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்படும் இருக்கும்.

ஒரு ரயில் பாதுகாப்பாக உள்ளது என்பதை துறை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிந்துக் கொள்ளவே 'LV' எழுத்துக் களை தாங்கி பலகைகள் மாட்டப் படுகின்றன.
ரயிலின் பின்பக்கத்தில் 'LV' என்ற ஆங்கில வார்த்தை




ஒரு வேளை இந்த பலகை ரயிலின் கடைசிப் பெட்டியில் காணப்பட வில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும்.
மேலும், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பது குறித்து நிலைய அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர் களுக்கும் தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தவும், அந்த வழித் தடத்தில் வரும் பிற ரயில்களையும் நிறுத்தவும் முடியும்.

அதனால் அடுத்த முறை நீங்கள் ரயிலின் பயணம் செய்யும் போது, இங்கே கொடுக்கப் பட்டுள்ள தகவல்களை ஒரு முறை சரி பார்த்து விட்டு, ரயிலேறுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)