பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசிய பேய்... காப்பாற்றிய நாய் !

0
பெண் குழந்தை பிறந்தாலே கள்ளிப்பால் ஊற்றியும் நெல் மணிகளை வாயில் போட்டும் கொலை செய்த காலம் இருந்தது. சிலர் கர்ப்பத்திலேயே காலி செய்து விடுகின்றனர். 
பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசிய பேய்
அதை தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டும் இன்றைக்கும் பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்கின்றனர். ஹரியானா மாநிலத்தில் இப்போது அதிர்ச்சி கரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

புதிதாக பிறந்த பெண் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி சாக்கடையில் வீசி விட்டு சென்றிருக்கிறார். அதை நாய்கள் இழுத்துப் போட்டு காப்பாற்றி யிருக்கின்றன.
ஹரியானாவின் கைதால் நகரில் இருந்த பாதாள சாக்கடைக்குள் பிளாஸ்டிக் பையில் ரத்த வாடையோடு கிடந்ததை 

அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் மோப்பம் பிடித்து வெளியே இழுத்துப் போட்டு குறைத்தன. அதைப் பார்த்து அந்தப்பக்கம் நடந்து போன சிலர் போலீசில் தகவல் கூறினர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஒரு கட்டைப் பையில் இருந்து ஒரு பொருளை எடுத்து வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி யுள்ளது.

குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ்  !
அந்த குழந்தையின் எடை 1,100 கிலோ கிராம் மட்டுமே இருக்கிறது. பெண் குழந்தை என்பதற்காக வீசி சென்றார்களா அல்லாது 

முறை தவறி பிறந்த குழந்தையாக இருக்காலாமா யார் அந்த பெண் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த பெண்ணைப் பற்றிய விபரங்களையும் குழந்தையின் புகைப்படங்களையும் போட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த பெண் பிடிபடும் பட்சத்தில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings