90 ஆயிரம் சதுர அடிக்கு நிழல் தரும் உலகின் மிகப்பெரிய மரம்?

0
பிரேசில் நாட்டில் பார்ப்பதற்கு அதிக மரங்களை கொண்ட பார்க்கை போல, காட்சி யளிக்கிறது ஒற்றை முந்திரி மரம்.
90 ஆயிரம் சதுர அடிக்கு நிழல் தரும் மரம்?
இந்த மரம் கடந்த 1994ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் என்பதற் காக கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது. 

இது 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டு பரந்து விரிந்து காணப்படுகிறது. 

இந்த பிராங்கி முந்திரி பார்க்கினை காண ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு வருகை தருகின்றனர்.
90 ஆயிரம் சதுர அடிக்கு நிழல் தரும் உலகின் மிகப்பெரிய மரம்?
இந்த மரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் முந்திரி பழங்களை வழங்குகிறது. 

இவற்றை ஜாம், பழச்சாறுக ளாகவும் சாப்பிடலாம். 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மரத்தின் கிளைகள் உயரமாக வளராமல், பக்க வாட்டில் வளர்ந்துள்ளது.

இந்த கிளைகள் பூமியை தொட்டதும், அப்படியே தங்கி பரவ ஆரம்பித்து விட்டது. மேலிருந்து பார்க்கும் போது சிறிய காட்டினை போலவே காட்சியளிப்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)