டிக்டாக் நிறுவன வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

0
டிக்டாக் செயலியை தடை செய்ய கோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய டிக் டாக் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டிக்டாக் நிறுவன வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு



டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அதன் வீடியோக் களை ஊடகங்களில் ஒளிப்பரப்பவும் மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
மேலும் டிக்டாக் வீடியோ செயலிக்கு தடை விதிப்பது குறித்து, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய செயலாளர், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மத்திய அரசும் கூகுள் நிறுவனுத் துடன் பேச்சு வார்த்தை நடத்தி டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தர விட்டிருந்தது. இதனை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. 



அந்த மனுவில் தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமலேயே டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதாக அந்த நிறுவனம் குறிப் பிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் இந்த டிக்டாக் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் பலதரப்பட்ட விசாரணைகள் செய்ய வேண்டி யுள்ளது. அதனால் சென்னை உயர் நீதிமன்றமே தகுந்த முறையில் விசாரிக்கும் எனக் கூறி மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings