சரவண பவன் ராஜகோபால் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு !

0
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்று நீதிமன்றத்தில் சரணடைய உச்ச நீதிமன்றம் அளித்திருந்த காலக்கெடு ஜூலை 7 -ம் தேதியோடு முடிவடைகிறது. 
சரவண பவன் ராஜகோபால் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு



ஆனால் 7ம் தேதி சரணடையாத ராஜகோபால் தரப்பில் கடைசி நேரத்தில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராஜகோபால், தனது உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு, (நீதிமன்றம் அளித்த அவகாசம் முடிந்த அன்று) தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
நார்ச்சத்து எடுத்துக் கொள்பவர் களுக்கான ஆலோசனைகள்
இதனைக் காரணம் காட்டி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனு இன்று விசாரணை க்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள் உடல் நிலையை காரணம் காட்டுவதாக இருந்தால் கடைசி நேரத்தில் ஏன் மனு தாக்கல் செய்தீர்கள் என்று தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தனர். 

ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித் ததோடு, கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபாலன் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தர விட்டனர்.

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தவிர மற்ற குற்றவாளிகள் சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் திங்கள் கிழமை சரணடைந்தனர். ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உட்பட மொத்தம் 9 பேர் குற்றவாளிக ளாக அறிவிக்கப் பட்டனர். 

இதை யடுத்து, உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தார் ராஜகோபால். எனினும், உச்ச நீதிமன்றம் ராஜ கோபாலுக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் நீதி மன்றத்தில் சரணடைய உத்தர விட்டது.  கால அவகாசம் முடிந்த நிலையில், சரணடைவதில் இருந்து விலக்குக் கேட்டு ராஜகோபால் தொடர்ந்த மனு இன்று நிராகரிக்கப் பட்டுள்ளது.



வழக்கு விவரம்:

கடந்த 2001 ஆம் ஆண்டு சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணி புரிந்தவரின் மகள் ஜீவஜோதி. இவர், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மேன்மையை அடையலாம் என சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜ கோபாலிடம் ஜோதிடர்கள் கூறி யுள்ளனர். 
ஏற்கெனவே 2 மனைவிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு தன்னுடைய ஓட்டலில் பணியாற்றிய ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ராஜகோபால்.  இதற்காக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கூலிப்படை வைத்து 2001-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கடத்தப் பட்டார். 

கணவரைக் காணவில்லை என்றும், ராஜகோபாலின் ‌ஆட்கள் அவரைக் கடத்தி விட்டதாகவும் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார் ஜீவஜோதி. விசாரணையை தொடங்கிய காவல்துறை கொடைக்கானல் மலைச் சாலையில் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடலைக் கைப்பற்றியது. இது தொடர்பாக ராஜகோபால், அவரது மேலாளர் டேனியல் உள்பட 9 பேர் கைது செய்யப் பட்டனர். 

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 2004 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. 



இதனை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனை யாக மாற்றி அதிரடி தீர்ப்பு அளித்தது.  
இதை யடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் ராஜ கோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஜூலை 7 ஆம் தேதிக்குள் சரணடைந்து சிறை செல்ல வேண்டும் என உத்தர விட்டது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings